மியூச்சுவல் பண்டு அறிமுகம் | Mutual fund Intro
mutual fund மியூச்சுவல் பண்டு இந்த வார்த்தையை சொல்லியவுடன் பங்குச் சந்தை பற்றிய ஒரு சின்ன அறிவு இருந்தால் , உங்களுக்கு நியாபகம் வருவது SIP என்ற வார்த்தை. இதை Systematic Investment Plan என்று சொல்கிறார்கள். நம்ம ஊர்ல சீட்டு போடுவதும் , இந்த மியூச்சுவல் பண்டும் கிட்ட தட்ட ஒன்றுதான். சரி , மேற்கொண்டு தெளிவாக பார்க்கலாம். இந்த மியூச்சுவல் பண்டு , இதர சேமிப்பு , முதலீடுகளை விட சற்று அதிகம் லாபம் தரும் என்று சொல்லலாம். அதனால் தான் , இதில் முதலீடு செய்ய வேண்டும் என்று பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் (Financial Adviser) அறிவுரை அல்லது ஐடியா தருகிறார்கள். ஒரு நிறுவனம் மக்களிடம் இருந்து நிதி பெற்றுக் கொண்டு , அதை முதலீடு செய்து அதில் வரும் லாபத்தில் ஒரு சிறிய பங்கை முதலீடு செய்த நபருக்கு கொடுப்பதுதான் மியூச்சுவல் பண்டு. இதை தமிழிலே "பரஸ்பர நிதி " என்று சொல்வது உண்டு. இதில் மிகவும் சாதகமான விஷயம் என்னவென்றால், 500 ரூபாய் , 1000 ரூபாய் என்று கூட நீங்கள் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் உங்களால் முடிந்த அளவு.