Posts

Showing posts from March, 2019

அந்நிய முதலீடு

Image
அந்நிய முதலீடு எப் ஐ ஐ (F oreign Institutional Investor ) FII - என்பது வெளி நாடுகளில் இருக்கும் தனி நபர் அல்லாத ஒரு நிறுவனம் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது ஆகும். இவர்கள் மூலமாக இந்திய பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நல்ல தரமான கம்பெனியின் பங்குகள் நல்ல விலைக்கு வாங்க தொடங்கும் மாற்றம் ஏற்பட்டது. இவர்கள் ஒரு கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள் என்றால், அந்த கம்பெனி பற்றி முழு விபரமும் தெரிந்து கொண்டுதான் வாங்குவார்கள். இவர்கள் முதலீடு செய்வது என்று முடிவெடுத்தால் சில கோடி கணக்கில்தான் முதலீடு செய்வார்கள். சரி, இவர்கள் இஷ்டத்திற்கு முதலீடு செய்யலாமா என்றால் முடியாது. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்யும். அது மட்டும் அல்லாது, ரிசர்வ் வங்கியும் இவர்கள் முதலீடு செய்யும் அளவை கண்காணித்துக் கொண்டு இருக்கும். இன்னொரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டியது, இவர்கள் சிறு லாபத்திற்காக பெரும்பாலும் விற்பதில்லை.

எந்தெந்த பாலிசி எதற்கு

Image
எந்தெந்த பாலிசி எதற்கு  ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு எந்த பாலிசி எடுக்க வேண்டும் என்ற ஒரு குழப்பம் வரும். கீழே உள்ள தகவல்களை படித்து விட்டு நீங்கள் தெளிவு பெறலாம்.  1. நீண்ட கால ஆரோக்கிய பராமரிப்பு           இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது லாங் டேர்ம் ஹெல்த் கேர் (Long Term Health Care)பாலிசி ஆகும். 2. புற்று நோய் போன்ற தீவிர சிகிச்சைக்கு           இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது கிரிட்டிகள் இல்னெஸ் (Critical Illness) பாலிசி  ஆகும். 3. மருத்துவ செலவுக்கு           இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது  ஹெல்த் இன்சூரன்ஸ் (Health Insurance) பாலிசி  ஆகும். 4. விபத்து அல்லது நோயால் வருமானம் பெற முடியாத அல்லது வேளைக்கு செல்ல முடியாத சூழ்நிலை         இந்த தேவைக்கு நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது  ஆக்சிடென்ட் டிசிபிலிட்டி (Accident Disability ) பாலிசி  ...

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

Image
போனஸ் மற்றும் போனஸ்  ரேஷியோ  நீங்கள் ஒரு கம்பெனியில் 100 பங்கு வாங்கி வைத்து இருக்குறிர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கம்பெனியின் இந்த வருட லாபம் நன்றாக இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த கம்பெனியில் 100 பங்கு நீங்கள் வாங்கியதால் அந்த கம்பெனியின் லாபத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு அல்லவா. எனவே இது போன்ற நேரங்களில் கம்பெனியானது போனஸ் பங்கு கொடுக்கும். அதாவது உங்களிடமிருந்து எந்த பணமும் பெற்றுக் கொள்ளாமல் உங்களுக்கு கூடுதல் பங்கு வழங்கும். இவ்வாறு கூடுதல் பங்கு எந்த வித பணமும் பெறாமல் கொடுப்பதை போனஸ் என்று கூறுகிறார்கள். போனஸ் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் கம்பெனியின் விருப்பமே. போனஸ் ரேஷியோ என்பது நீங்கள் வைத்து இருக்கும் பங்குகளுக்கு எத்தனை பங்கு போனஸ் ஆக கொடுக்கலாம் என்று சொல்ல பயன்படுவது. உதாரணமாக , 1 பங்கிற்கு 2 பங்குகள் போனஸ் என்றால் , இப்பொழுது உங்கள் பங்கு 3 ஆக உயர்ந்து இருக்கும். இது எப்படி இருக்கு. சில நேரங்களில் 1:4 என்று போஸ் ரேஷியோ சொல்வார்கள். அப்படி என்றால் 4 பங்கிற்கு ஒரு பங்கு போனஸ் என்று பொருள்படும். இப்பொழுது உங்களை பங்கு எண்ணிக்கை ...

சப்போர்ட் லெவெல்

Image
சப்போர்ட் லெவெல் நீங்கள் ஒரு பங்கை வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அது இன்னும் ஒரு லெவல் தாண்டி ஒரு குறிப்பிட்ட விலை வர வேண்டும் என்று எதிர்பார்க்கீறீர்கள். நீங்கள் நினைப்பது போலவே பிறரும் நினைப்பது உண்டு. இந்த விலை தீர்மானிப்பதைத்தான் சப்போர்ட் லெவல் (Support Level) என்று சொல்கிறார்கள்.  எனவே இந்த சப்போர்ட் லெவெல் விலை அடைந்தவுடன் எல்லாரும் வாங்குவார்கள். பங்கின் விலை ஏற ஆரம்பிக்கும். சப்போர்ட் லெவல் அடைய நிறைய காலம் ஆகிறது என்றால் ஏன் என்று கம்பெனி பற்றிய செய்தி தேடி தேடி பார்க்க வேண்டும். சில நேரங்களில் சப்போர்ட் விலை அடைந்து உடனே குறைகிறது என்றால் ஏதோ கம்பெனிக்கு பாதகமான செய்தி காரணமா? என்று விசாரிக்க வேண்டும். பாதகமான செய்தி என்று தெரிந்தால் உடனே விற்று வெளியே வந்து விட வேண்டும்.

ரெசிஸ்டன்ஸ்

Image
ரெசிஸ்டன்ஸ் - Resistance ரெசிஸ்டன்ஸ் (Resistance) தாண்டி பங்கு விலை செல்கிறது என்று சில நேரங்களில் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். இந்த ரெசிஸ்டன்ஸ் என்றால் என்ன வென்று பார்க்கலாம். ஒரு பங்கின் விலை ஒரு குறிப்பிட்ட விலையை தாண்டியவுடன் இதற்கு மேல் இந்த பங்கினுடைய விலை ஏறாது என்பார்கள். இது போன்ற நிலையை ரெசிஸ்டன்ஸ் என்று சொல்வார்கள். இது போன்ற நேரத்தில் பங்கு உச்ச கட்ட நிலையை அடைந்ததாக எண்ணி உடனே விற்று விடுவார்கள். ஆனால் ஏதேனும் ஒரு காரணத்தினால், ஒரு நல்ல செய்தி , உதாரணமாக அந்த கம்பெனிக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது என்று செய்தி வந்தால் , அந்த ரெசிஸ்டன்ஸ் உடையப்பட்டு பங்கின் விலை மேலும் ஏறும் எனபதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது போன்ற நேரத்தில் பங்கின் விலை மேலும் ஏறும். அதிக லாபமும் கிடைக்கும்.