போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ
![]() |
| போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ |
நீங்கள் ஒரு கம்பெனியில் 100 பங்கு வாங்கி வைத்து இருக்குறிர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த கம்பெனியின் இந்த வருட லாபம் நன்றாக இருக்கிறது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த கம்பெனியில் 100 பங்கு நீங்கள் வாங்கியதால் அந்த கம்பெனியின் லாபத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு அல்லவா. எனவே இது போன்ற நேரங்களில் கம்பெனியானது போனஸ் பங்கு கொடுக்கும். அதாவது உங்களிடமிருந்து எந்த பணமும் பெற்றுக் கொள்ளாமல் உங்களுக்கு கூடுதல் பங்கு வழங்கும். இவ்வாறு கூடுதல் பங்கு எந்த வித பணமும் பெறாமல் கொடுப்பதை போனஸ் என்று கூறுகிறார்கள். போனஸ் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் கம்பெனியின் விருப்பமே.
போனஸ் ரேஷியோ என்பது நீங்கள் வைத்து இருக்கும் பங்குகளுக்கு எத்தனை பங்கு போனஸ் ஆக கொடுக்கலாம் என்று சொல்ல பயன்படுவது. உதாரணமாக , 1 பங்கிற்கு 2 பங்குகள் போனஸ் என்றால் , இப்பொழுது உங்கள் பங்கு 3 ஆக உயர்ந்து இருக்கும். இது எப்படி இருக்கு.
சில நேரங்களில் 1:4 என்று போஸ் ரேஷியோ சொல்வார்கள். அப்படி என்றால் 4 பங்கிற்கு ஒரு பங்கு போனஸ் என்று பொருள்படும். இப்பொழுது உங்களை பங்கு எண்ணிக்கை 5 ஆக இருக்கும். போனஸ் கொடுத்தே பிரபலமான சில கம்பெனிகள் உண்டு. உதாரணம் இன்போசிஸ்.

Comments
Post a Comment