பணவீக்கம்

Pana Veekam
Pana Veekam


நீங்கள் ஒவ்வொரு முதலீடு மேற்கொள்ளும் பொழுதும் நிதி ஆலோசகர்கள் பண வீக்கத்தை கணக்கில் கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். ஏன்  இந்த பண வீக்கத்தை கணக்கில் கொள்ள வேண்டும் ? முதலீடு செய்யும் பொழுது பண வீக்கத்தின் முக்கியத்துவம்தான் என்ன ?

வழக்கம் போல ஒரு சிறு உதாரணம் கொண்டு ஆரம்பிக்கலாம். அரசு பண வீக்கம் 8% அறிவிக்கிறது என்று வைத்துக் கொண்டால், 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை , 108 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனைதான் சுருக்கமாக பண வீக்கம் என்று சொல்கிறார்கள்.
பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம் என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு பண வீக்கம் ஏற்படும் பொழுது , பொருட்களின் விலை ஏறும். அதனால்  நம்முடைய வாங்கும் சக்தி குறையும்.  இன்னும் ஓர் உதாரணம். ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் குறைவாக இருக்கிறது. இது போன்ற சூழலில் அந்த பொருளின் விலை உயரும்.

வெங்காயம் விலை சற்று அதிகம் என்று வைத்துக் கொள்வோம். இதனால் மக்கள் இதை மிகவும் குறைவாக வாங்குவார்கள். எனவே பணம் செலவழிக்கப்படாமல் பணப்புழக்கம் குறையும். பொருட்களை வாங்குவது குறையும் பொழுது , அதன் உற்பத்தி குறைய ஆரம்பித்து விடும். இது போன்று பல பிரச்சினைகள் ஏற்பட்டு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

ஒரு முதலீடு ஆரம்பிக்க பணவீக்கம் பற்றிய இதன் சிறு தெளிவு போதும் என்பதால் இதனை தாண்டி ஆழமாக செல்லவில்லை.









Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு