டேர்ம் இன்ஷூரன்ஸ் - ரைடர்ஸ்
![]() |
| டேர்ம் இன்ஷூரன்ஸ் - ரைடர்ஸ் |
நீங்கள் ரூபாய் 10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு ஒன்று எடுக்க விரும்புகிறீர்கள் என்றால்
அதற்கு என்று தனியாக ஒரு பாலிசி எடுக்க தேவை இல்லை. அதாவது நீங்கள் தனியாக ஒரு பாலிசி எடுத்தால் அதற்கு ஒரு பெரும்பாலும் ரூ.5,000 முதல் 15000 என்று ஒதுக்க வேண்டும்.
இது போன்ற நேரத்தில் நீங்கள் எடுக்க போகும்
டேர்ம் இன்ஷூரன்ஸ் உடன் ரைடர்ஸ் என்ற ஒரு வசதி உள்ளது. அதில் விபத்துக் காப்பீடு கூடுதலாக உள்ள வசதியை தேர்ந்தெடுத்து அதனுடன் கூடுதலாக சொற்ப பணத்தை செலுத்தினாலே விபத்துக்கு காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும்.
இது போக சில தீவிர நோய்களுக்கான காப்பீடு வசதியையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். சில நிறுவனங்கள் 50 வகையான நோய்களுக்கு கூட இந்த வசதியை வழங்குகிறது. இதன் மூலம் குறைவான பிரீமியம் செலுத்தி கூடுதல் கவரேஜ் பெற முடியும். ஏதேனும் நோயினால் அல்லது விபத்து காரணமாக உறுப்புகள் பலமாக சேதம் அடைந்தாலும் தொடர்ந்து பீரிமியமும் கட்ட தேவை இல்லை என்ற வசதியும் இருக்கிறது. அதற்கு இன்னும் சற்று கூடுதல் செலுத்த வேண்டி இருக்கும்.

Comments
Post a Comment