வருமான வரி சலுகை
![]() |
| Tax Savings |
வருட வருடம் வருமான வரி செலுத்துகிறோம், ஆனால் 80சி தவிர வேறு எதுவும் நமக்கு பெரிதாக தெரிவதில்லை. சரி , வேறு என்ன வழி எல்லாம் இருக்கிறது என்று பாப்போம்.
1. வருமான வரிச்சட்டம் 80CCD (1B) பிரிவுபடி, என்.பி.எஸ் - ல் முதலீடு செய்யும் பொழுது 50,000 ரூபாய்வரை வரிக்கழிவு பெறலாம்.
2. வருமான வரிச் சட்டம் 80U-யின் படி , உடல் ஊனத்தால் துன்பப் படுபவர்களுக்கு ரூ.75,000 வரையிலும், மிகவும் அதிகமாகத் துன்பப்படுபவர்களுக்கு ரூ.1,25,000 வரையிலும் வருமான வரிக்கழிவு பெறலாம்.
3. வருமான வரிச் சட்டம் 80E பிரிவின்படி, எட்டு ஆண்டுகள் வரை நீங்கள் வாங்கிய கல்விக் கடனுக்காகச் செலுத்தப்படும் வட்டியை வரிக்கழிவில் சேர்த்து பலன் பெறலாம் .
4. பிறரைச் சார்ந்து வாழும் உடல் ஊனமுற்றவர்களில் 40-80% வரை ஊனமுற்றவர்கள் ரூ.75,000 வரையிலும், 80 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்றவர்கள் ரூ.1,25,000 வரையிலும் வருமான வரிச் சட்டம் 80DDB-யின்படி மருத்துவச்செலவுகளுக்கு வரிக்கழிவு பெற்று பயன் பெறலாம்.
5. மூத்தக் குடிமக்கள் என்று இருப்பின் , வருமான வரிச் சட்டம் 80-TTB பிரிவின்படி, ரூ.50,000 வரை தங்களது வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பின் வட்டித் தொகைக்கு வரிக்கழிவு சேர்த்து பயன் பெறலாம்.
6. முதல்முறையாக வீடு கட்டியவர்கள் அல்லது வாங்கியவர்கள், வருமான வரிச் சட்டம் 80EE பிரிவின்படி, ரூ.50,000 வரை வட்டித் தொகையை வரிக்கழிவுக்கு காட்டி பயன் பெறலாம்.
7. வருமான வரி சட்டம் 80சி மூலம் செல்வ மக்கள் திட்டம் (SSA) , பிக்சட் டெபாசிட், பி பி எப் (PPF) போன்றவற்றை காட்டி பயன் பெறலாம்.

Comments
Post a Comment