பங்குச் சந்தை அறிமுகம்


பங்குச் சந்தை
பங்குச் சந்தை அறிமுகம் 

பங்குச் சந்தை என்றவுடனே பலர் இது சூதாட்டம் என்று செய்வது உண்டு. சில படித்தவர்காளுக்கே மட்டும் புரியும், என்று சொல்வது உண்டு. இப்படி ஒவ்வ்ருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வது உண்டு. ஆனால் உண்மை அது வல்ல.

ஆம், பங்குச் சந்தை என்பது அவ்வளவு பெரிய புரிய இயலாத ஒன்றும் அல்ல. சிறிய அளவில் கணக்கு போடும் திறமை, பங்குச் சந்தைக்கு என்று சில அடிப்படை விதிகளை புரிந்து கொள்ளுதல் போதுமானது.

சரி , உண்மையிலே இந்த பங்குச் சந்தை முதலீடு பாதுகாப்பானதா? பாதுகாப்பு இல்லைதான். எந்த வித ஆராய்ச்சி இல்லாமல் தொடரும் முதலீடு பெரும்பாலும் நஷ்டமாகவே முடியும்.

எல்லோராலும் இந்த பங்குச் சந்தையை சரியாக கணித்து விட முடியுமா? 100 சதவிகிதம் கணித்து விட முடியாது. சில நேரங்களில் கணிப்புகளை தாண்டியும் அதன் வேலையை காட்டி விடும். பிறகு நஷ்டம் தான் ஏற்படும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனம் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் முதலீடு தொகையோ உங்களிடம் சற்று குறைவாக இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு தேவைப்படும் பணத்தை மக்களிடம் இருந்து பெற முயற்சிப்பதுதான் பங்குச் சந்தை. இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம். உங்கள் நிறுவனத்துக்கு மக்கள் மூலம் 100000 (ஒருலட்சம்) ரூபாய் தேவைப்படுகிறது என்றால் அதை நீங்கள் சிறு பங்காக பிரித்து வெளியிடுவார்கள் . அவ்வாறு சிறு பங்காக பிரித்து ஒரு பங்கின் விலை 100 ரூபாய் என்று சொல்லி   ஆயிரம் பங்குகளை வெளியிடுவிர்கள். இப்பொழுது 1000X100=100000 ரூபாய் கிடைத்து விடும்.

இந்த பங்கை யாரெல்லாம் வாங்கினார்களோ அவர்கள் உங்கள் கம்பெனியின் பங்குதாரர்கள் ஆகி விடுவார்கள். இன்னும் சற்று விளக்கமாக சொன்னால், கம்பெனியின் லாப நஷ்டத்தில் பங்கு எடுத்துக் கொள்வார்கள்.  லாபம் வந்தால் பிரித்துக் கொடுப்பீர்கள். நஷ்டம் வந்தால் பணம் போனது போனதுதான்.  இந்த உதாரணம் மூலம் நீங்கள் பங்குச் சந்தை என்றால் என்னவென்று புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எதையும் ஆராயாமல் நாம் முதலீடு செய்ய போவதில்லை. நாம் சிறிதளவாவது அறிந்து பார்க்க என்னென்ன தவை என்று அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.





Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு