மியூச்சுவல் பண்டு வகைகள் - லிக்விட் ஃபண்ட்கள்
![]() |
| லிக்விட் ஃபண்ட் |
மியூச்சுவல் பண்டில் சில வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. நாம் அந்த ஒவ்வொரு வகையையும் எவ்வாறு தெரிந்து கொண்டு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. லிக்விட் ஃபண்ட்கள் (Liquid Fund)
உங்களிடம் சிறிது பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த பணம் உங்களுக்கு ஒரு 2 நாட்கள் அல்லது ஒரு 7 நாட்கள் அல்லது ஒரு மாதம் கூட தேவைப்படாமல் உங்களிடம் இருக்கலாம். இது போன்று சமயத்தில் வெறும் இரண்டு நாட்கள் என்றாலும் கூட நீங்கள் லிக்விட் ஃபண்ட் முலமாக முதலீடு செய்து சில லாபம் பெறலாம், பெரும்பாலும் வங்கி பிக்சட் கணக்கிற்கு ஈடாக லாபம் பெறலாம்.
சில முக்கிய விஷயங்கள்:
- குறுகிய காலம் என்றால் மட்டுமே இதை தேர்வு செய்ய வேண்டும். நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதல்ல.
- நீங்கள் செய்யும் முதலீட்டின் மதிப்பு பெரும்பாலும் குறைவதில்லை.
- லாக் இன் காலம் கிடையாது.
மேற்சொன்ன இரண்டு விஷங்களை பார்க்கும் பொழுது இது வங்கி பிக்சட் டெபாசிட் போலவே தோன்றும். ஆனால், வங்கி போன்று இங்கு லாகின் (Lock in ) கிடையாது. நினைத்த நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு : பங்குச் சந்தை , மியூச்சுவல் பண்டு எல்லாமே ரிஸ்க் உள்ளதுதான். எனவே நன்கு அலசி ஆராய்ந்து பிறகு முதலீடு செய்ய வேண்டும்.

Comments
Post a Comment