மியூச்சுவல் பண்டு வகைகள் - ஈக்விட்டி ஃபண்ட்கள்
![]() |
| Equity Fund In Tamil |
ஈக்விட்டி ஃபண்ட்கள் என்பது , முதலீட்டின் பெரும் பகுதியை நிறுவனங்களின் பங்குகளில் ( Company Shares ) முதலீடு செய்கின்ற ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இவை குரோத் ஃபண்ட்கள் ( Growth Fund) எனவும் அழைக்கப்படுகிறது.
இதை மிக எளிதாக புரிந்து கொள்ள, உங்களுக்குத் தெரிந்த ஒரு பிரபலமான கம்பெனி ஒன்று பங்குச் சந்தையில் நன்றாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அதே போன்று ஒரு கம்பெனியில் முதலீடு செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களுக்கு பங்குச் சந்தை பற்றிய போதிய தெளிவின்மை காரணமாக முதலீடு செய்ய யோசிப்பீர்கள். இது போன்ற நேரத்தில் நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம். உங்கள் ஃபண்ட் மேனேஜர் உங்களுக்காக அலசி ஆராய்ந்து நல்லதொரு கம்பெனியில் முதலீடு செய்வார்.
முதலீடு செய்த கம்பெனி நல்லதொரு லாபத்தை அடையும் பொழுது , அதில் ஒரு பாகத்தை உங்களுக்குத் பிரித்து கொடுக்கும். கம்பெனி நஷ்டம் அடையும் பட்சத்தில் உங்கள் பணமும் இரக்கம் காணும், அதாவது நீங்களும் நஷ்டத்திற்கு உள்ளாவீர்கள்.
உங்கள் முதலீடு நீண்ட காலம் என்றால் இந்த ஃபண்டு உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். குறைந்த கால முதலீட்டிற்கு இந்த ஃபண்டு பெரும்பாலும் சரி வருவதில்லை.

Comments
Post a Comment