தங்கம் எப்பொழுது வாங்குவது?


vangum neram
Gold vangum neram


தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு உடனே கடைக்கு சென்று உங்கள் கிரெடிட் கார்டு எடுத்து வாங்கி வீடுவீர்களா ?

நிச்சயம் உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான நாலு பேரிடம் விசாரிப்பீர்கள். எந்த கடையில் வாங்குவது ? இப்பொழுது வாங்க சரியான நேரமா ? என்று எல்லாம் கண்டிப்பாக கேள்வி கேட்பீர்கள்.

உலகத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் அதிக அளவு தங்கம் வாங்குகிறார்கள். அதே இந்தியாவில், தென் இந்தியா ஓரளவு அதிகமாக தங்கம் வாங்கும் இடம்.

இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குவது சற்று அதிகமாக இருக்கும். எனவே பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை சற்று அதிகமாகும் வாய்ப்பு மிக அதிகம். உதாரணம் , இந்த தீபாவளி , பொங்கல், இன்னும் பல பண்டிகைகள் ....

அதிலும் குறிப்பாக , அட்சய திருதியை நாளில் சொல்லவே வேண்டாம். அன்று ஒரு சிறு தங்கமாவது வாங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் பல பேர். உண்மையில் அன்று தங்கம் வாங்கக் கூடாது. அது ஏன் என்று பிறகு விளக்கமாக பார்க்கலாம்.

எனவே இந்த பண்டிகை மற்றும் சுப காரியங்கள் நடை பெறா  நாள்களில் தங்கம் விலையை பிற மாதங்களோடு ஒப்பிட்டு குறைவு என்ற சமயத்தில் தங்கம் வாங்க முடிவு செய்யலாம்.

மேலும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் வருடத்தின் கடைசி மாதத்தில் உலக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் பல நாடுகள் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தயாராவதால் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து இயல்பாகவே விலை சற்று கூடுதலாக இருக்கும்.

சரி , இதை எல்லாம் தாண்டியும் சில நேரங்களில் விலை கூடவும் செய்யும் , குறையவும் செய்யும். அது ஏன் என்று அடுத்த சில பகுதியில் பார்க்கலாம்.




















Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு