பட்ஜெட் வைத்து முதலீடு
- Get link
- X
- Other Apps
ஒவ்வொரு வருடமும் கடந்து போகிறது, ஆனால் சேமிப்பு,
முதலீடு என்று எதுவும் அதிகரிக்கவில்லையா ? தவறு எங்கே நடந்தது
என்று கண்டு பிடியுங்கள். பட்ஜெட் என்று ஒன்று போட்டால் , நிச்சயம்
நல்வழி பிறக்கும்.
குறிப்பு - முறையாக கடைபிடிக்க வேண்டும்.
பட்ஜெட்டை எப்படித் தயார் செய்வது, அதைத் தயார் செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவோம்.
உதாரணத்தோடு விளக்கும் பொழுது எல்லாமே அழகாக புரியும் என்ற நம்பிக்கையில் இதை தொடர்கிறோம்.
எவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
எளிதாக புரிந்து கொள்ள அட்டவணையோடு பார்க்கலாம்.
எவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
- வீடு வாடகை
- இ எம் ஐ
- மளிகை செலவு
- கல்விச் செலவு
- மருத்துவச் செலவு
- போக்குவார்த்துச் செலவு
- மின்சாரக் கட்டணம்
- இதர செலவுகள் ( கேபிள் , பொழுதுபோக்கு )
எளிதாக புரிந்து கொள்ள அட்டவணையோடு பார்க்கலாம்.
| நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்காக பட்ஜெட் | ||
| மாத வருமானம் 45000 படி , | ||
| சம்பளம் | 45000 | 540000 |
| செலவுகள் | ||
| வீடு வாடகை | 10000 | 120000 |
| இ எம் ஐ | 5000 | 60000 |
| மளிகை செலவு | 10000 | 120000 |
| கல்விச் செலவு | 4000 | 48000 |
| மருத்துவச் செலவு | 1500 | 18000 |
| போக்குவார்த்துச் செலவு | 2500 | 30000 |
| மின்சாரக் கட்டணம் | 2000 | 24000 |
| இதர செலவுகள் ( கேபிள் , பொழுதுபோக்கு ) | 2000 | 24000 |
| 37000 | 444000 | |
| சேமிப்பு = வருமானம் - செலவு | 8000 | 96000 |
முக்கியமான குறிப்பு :
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை மருத்துவ காப்பீடு மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கப்படவில்லை எனில் அதையும் கணக்கில் சேர்த்து கொள்ள வேண்டும். சேமிப்பு :
மீதமிருக்கும் 8000 ரூபாயை முதலீடு செய்து அதன் மூலம் பணம் பெருக்குவது அந்த பட்ஜெட் போட்ட அந்த குடும்பத்தின் பொறுப்பு.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி மூலம் மாதந்தோறும் 5,000 ரூபாயை முதலீடு செய்தால் குறைந்த பட்சம் 12% அளவில் வருமானம் கிடைக்கும். இதுவே நீண்ட கால முதலீடு என்றால் மேற்கொண்டு நல்ல வருமானம் எதிர்பார்க்கலாம்.
சம்பள உயர்வு மற்றும் போனஸ் வரும் பொழுது அதே பட்ஜெட்டை தொடரும் பொழுது உங்கள் முதலீடு இன்னும் அதிகரித்து வருமானம் மிகவும் அதிகரிக்கும். உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment