ரியல் எஸ்டேட் குறுகிய கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா ?
![]() |
| neenda kaala or kurukiya kaala muthaleedu |
கண்டிப்பாக குறுகிய காலத்தில் லாபம் எண்ணி ரியல் எஸ்டேட் முதலீடு செய்வது மிகவும் தவறான விஷயம். இதோ அதற்கான விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
எந்த ஒரு முதலீடு செய்தாலும் பண வீக்கம் என்ற ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எல்லா நிதி ஆலோசகர்களின் முக்கியமான கருத்து அல்லது அறிவுரை.
பணவீக்கம் என்றால் என்னவென்று நாம் ஏற்கனவே வேறு ஒரு பகுதியில் பார்த்து விட்டோம்.
1. முத்திரைக் கட்டணம் 7% சதவிகிதத்தை யாரும் நினைவில் வைப்பது இல்லை.
2. 1 % பதிவுக் கட்டணத்தையும் யாரும் நினைவில் வைப்பது இல்லை.
3. ஜி எஸ் டி என்ற ஒன்றையும் நினைவில் இல்லை.
4. இதையும் தாண்டிய சில இதர செலவுகள் ( லீகல் செக் , வீடு கடன் வட்டி , இன்னும் பல )
மேற்கண்ட எல்லாம் சேர்ந்து ஒரு 15% என்று வைத்துக் கொண்டால் கூட, நீங்கள் வாங்கிய சொத்து இந்த 15% தாண்டி விலை ஏற வேண்டும்.
நீண்ட கால முதலீடாக இருக்கும் பட்சத்தில் இந்த விலை ஏற்றம் மெதுவாக ஏறி ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும். எனவே , குறுகிய கால முதலீடு ரியல் எஸ்டேட்டில் ஒரு நல்ல முதலீடாக அமைய வாய்ப்பு மிகவும் குறைவு.

Comments
Post a Comment