கடன் வாங்கலாமா ?
![]() |
| Kadan vaangalaama? |
கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது என்று சொல்லும் அளவிற்குத்தான் இன்றைய சூழ்நிலை பெரும்பாலானவர்களுக்கு அமைகிறது. தேவையான நேரத்தில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் எவ்வளவு வாங்க வேண்டும் , நமது தகுதி என்ன? என்று சில விதி முறைகளையும் அவற்றை எவ்வாறு முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்று எல்லாம் ஆராய வேண்டும்.
தற்போதைய உங்களது தொழிலின் நிலை அல்லது மாத வருமானத்தின் நிலை , நீங்கள் வாங்கும் கடன் காலத்தின் அளவு மற்றும் அந்த சமயத்தில் உங்கள் வருமானத்தின் நிலை என்ன என்று சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அத்தியா வசியத்துக்கும், அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் கடன் என்பதன் ஆரம்பப் புள்ளி என்று நிதித் துறை நிபுணர்கள் கூறுவது உண்டு. இதை சரியாகப் புரிந்து கொண்டு உங்கள் கடனை தீர்மானித்தல் நலம்.
தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் பிறகு உங்களை பல சிக்கலுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு மிக மிக அதிகம்.

Comments
Post a Comment