மணிபேக் பாலிசி திட்டம்
![]() |
| மணிபேக் பாலிசி திட்டம் |
மணிபேக் பாலிசி திட்டமும் நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். ஏன் இந்த பாலிசி அதிகமாக எடுக்கப்படுகிறது என்றால் வழக்கமா போல அதே பதில்தான். முதலீடு என்ற ஒரு வார்த்தைதான் காரணம். மணிபேக் பாலிசி என்றால் என்னவென்று பாப்போம்.
இந்த திட்டத்தில் காப்பீடு செய்யும் நபருக்கு பாலிசி முடியும்வரை அல்லது அந்த நபர் உயிருடன் இருக்கும் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகையினை வழங்கும். இது போன்று வழங்குதலை "வாழ்வதற்கான ஆதாயம்" என்று அழைக்கிறார்கள்.
இந்த திட்டத்தில் எண்டோவ்மென்ட் பாலிசியை விட சற்று அதிகமாக பிரிமியம் செலுத்த வேண்டி இருக்கும். எதிர்பாரதமாக பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் பாலிசி முதிர்வுத்தொகை அவரது குடும்பத்துக்கு சென்றடையும். மேலும் குறிப்பிட்ட இடைவெளி நிதிப்பயன் ஆனது பாலிசி துவங்கிய 5 வது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் பாலிசி முதிர்வுகால முடிவு வரையில் அல்லது பாலிசிதாரரின் இறப்பு வரையில் தொடர்ந்து வழங்கப்படும். பாலிசி கால வரையின்போது இறப்பு நிகழ்ந்தால், அன்றைய தேதி வரை செலுத்திய கட்டணத்திலிருந்து எதுவும் கழிக்கப்படாமல், முழுத் திட்டத் தொகையும் அவரது குடும்பத்தை சென்றடையும். மேற்கொண்டு பிரீமியம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

Comments
Post a Comment