ஹால்மார்க் முத்திரை - தங்கம்


ஹால்மார்க்
Haalmark muthirai in Tamil

ஹால் மார்க் முத்திரை என்பது இந்திய தர ஆணையம் (BIS - Bureau of Indian Standards) நகையின் தரத்துக்கு வழங்கும் ஒரு முத்திரை ஆகும். ஆதலால் நாம் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்ய இது பயன்படுகிறது.

நீங்கள் வாங்கும் தங்கம் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ  இருந்தாலும் இந்த முத்திரை கண்டிப்பாக இருக்கும். இந்த முத்திரை பற்றி இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம். கீழே உள்ளவற்றை நீங்கள் கண்டிப்பாக பார்த்து அல்லது கேட்டு தெரிந்து கொண்டு வாங்கலாம்

1. பி ஐ எஸ் முத்திரை 

2. தரக் குறியீடு (), உதாரணமாக 916 எனபது 22 கேரட் என்பதைக் குறிக்கும்.

3. ஹால்மார்க் முத்திரை பதித்த ஆண்டைக்  குறிக்கும் எழுத்து 

4. தரம் சோதனை செய்யப்பட்ட ஆய்வகத்தின் முத்திரை 

5. கடையின் முத்திரை அல்லது நகை விற்பனையாளர் 


இவ்வாறு பார்த்து வாங்குவதன் மூலம் தங்கத்தின் மீதான உங்கள் முதலீடு ஏமாற்றப்படமால் இருக்கும். இவ்வளவு பார்த்து வாங்கியும் சில நேரங்களில் ஏமாற்றப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் என்ன  செய்வது என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

ஹால்மார்க் நகையில் நீங்கள் வாங்கும் கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையினுடையதுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது.







Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு