எந்தெந்த தேவைகளுக்காக கடன் வாங்கலாம்?
![]() |
| எந்தெந்த தேவைகளுக்காக கடன் வாங்கலாம்? |
எல்லாமே தேவைகள் தான் என்று கடன் வாங்கி வாங்கக் கூடாது. அத்தியாவசியம் மற்றும் அனாவசியம் இரண்டையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் அல்லது பைக் வாங்குவது அவசியம். இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் அல்லது பைக் போதும். அதிக பாதுகாப்பு வசதி என்று பல விஷயங்களை சிந்தித்து ஆடம்பர கார் வாங்கினால் உங்கள் வருமான எல்லையைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வது என்பது நலம்.
கல்விக்காக கடன் வாங்கலாம். ஆனால் வாங்கும் கடனை எப்படி திரும்பச் செலுத்தப் போகிறோம், படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் நிதானமாக யோசித்துப் பார்த்து கல்விக் கடன் வாங்குவது நல்லது.
சொந்தமாக வீடு இல்லாத பட்சத்தில் வீடு வாங்கலாம். ஆனால் சொந்தமாக வீடு இருந்து இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்குவது நிச்சயம் தவறு. கிடைக்கும் வீடு வாடகை , பண வீக்கம் என்று கூட்டி கழித்து பார்த்தல் நிச்சயம் லாபம் இல்லை.
கடன் வாங்குவதே தவறு என்று நிதி ஆலோசகர்கள் ஒரு பொழுதும் சொல்வதில்லை. மாறாக கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காக பெருகி வளரும் என்கிறபட்சத்தில் கடன் வாங்குவது தவறே இல்லை. உதாரணமாக வீட்டுக் கடன் வாங்கலாம், வீட்டின் மதிப்பு உயரும் என்ற நம்பிக்கையில். ஆனால் ஆடம்பர காரின் மதிப்பு ஒரு பொழுதும் உயர்வதில்லை.

Comments
Post a Comment