பண வீக்கத்தின் வகைகள்
![]() |
| Types of Pana veekam |
பண வீக்கத்தின் வகைகளை பார்க்கும் முன் பண வீக்கம் 8 % என்று வைத்துக் கொண்டால் எல்லா பொருளுமே 8 % விலை ஏற்றம் என்று பொருள் அல்ல. உதாரணம் , கச்சா எண்ணெய் விலை இதனைத் தாண்டியும் பல மடங்கு, அதவாது 25 % அளவு கூட உயர்ந்து இருக்கும்.
இந்தியாவினைப் பொறுத்தவரை , மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் வெள்ளியன்று இந்த பணவீக்க விகிதத்தை வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள்.
Wholesale Price Index - மொத்தம் மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய ஒரு பொதுவான விலைவாசிக் குறியீடு.
- உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படும்.
- மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு
- உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்)
2 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே உள்ள பணவீக்கத்தை இந்திய அரசு மிதமான வீக்கம் என்று சொல்கிறது.
மிகைவீக்கம். இது அசாதாரண மற்றும் எளிதில் கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வைக் குறிக்கும்!
இல்லாத பணவீக்கம், பூஜ்யத்தைத் தாண்டாமல் 1 சதவீதத்துக்குள் உள்ள பணவீக்கம்.
பணவாட்டம் என்பது அப்படியே பணவீக்கத்தின் எதிர்நிலையைக் குறிக்கும். அதாவது விலைகள் வீழ்ந்து கொண்டே செல்வது.
இனி நீங்கள் எந்த முதலீடு செய்வதாக இருந்தாலும் இந்த பண வீக்கத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Comments
Post a Comment