மியூச்சுவல் பண்டு வகைகள் - ஹைபிரிட் ஃபண்ட்
![]() |
| Hybrid Fund in Tamil |
நாம் இதுவரை சில திட்டங்கள் பார்த்து வந்தோம். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் முதலீடு செய்யலாம் என்று சில நேரங்களில் நினைக்காத தோன்றும். அப்படி ஒரு நினைப்பு வரும் பொழுது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த ஹைபிரிட் ஃபண்ட்.
இந்த திட்டம் மட்டும் அல்ல , வேறு எந்த திட்டமாக இருந்தாலும் , உங்களுக்கு போதிய தெளிவு இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒரு நிதி ஆலோசகரை ஆலோசித்து முடிவு எடுங்கள்.
நாம் ஏற்கனவே ஈக்விட்டி ஃபண்ட் , டெப்ட் ஃபண்ட் , கோல்ட் ஃபண்ட் , லிக்விட் ஃபண்ட் என்று சில திட்டங்கள் உள்ளன என்று பார்த்தோம். இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் முதலீடு செய்வார்கள் , இதைத்தான் ஹைபிரிட் திட்டம் என்று அழைக்கிறார்கள்.
- இதில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் இரண்டு திட்டங்களின் நன்மையையும் பெற முடியும். அதே நேரத்தில் அதற்கு எதிர் மறையும் நடக்க வாய்ப்புண்டு.
- பெரும்பாலும் ஈக்விட்டி மற்றும் டெப்ட் அல்லது டெப்ட் மற்றும் தங்கம் ஆகிய இரண்டு சொத்துக்களில் முதலீடு செய்யும் சில திட்டங்கள் அதிகம் இருக்கின்றன.
- ஈக்விட்டி, டெப்ட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டமும் உள்ளது.
- எனவே இதில் முதலீடு செய்யும் முன் தெளிவான சிந்தனை அவசியம்.

Comments
Post a Comment