டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம்
டேர்ம் இன்ஷூரன்ஸ்


டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன ? இதை என் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் பரிந்துரை செய்கிறார்கள். விரிவாக பார்க்கலாம்.

பீரிமியம் ரொம்ப கம்மியா இருக்கனும் , ஆனால் அதிக  காப்பீடு வேண்டுமா? அப்போ டேர்ம் இன்ஷூரன்ஸ் தான் உங்களுக்கு பொருத்தமா இருக்கும்.

உதாரணமாக கண்ணன் மாதம் ரூபாய் 50000 சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மிகவும் வசதியாக வாழ்கிறார். சரியான முறையில் முதலீடு செய்கிறார் . மியூச்சுவல் பண்ட் மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.  வீட்டுத் தவணை 15000 செலுத்துகிறார். 5000 ரூபாய் குழந்தை பிடிப்பு என்றும் , 8000 ரூபாய் தங்கத்தில் முதலீடு செய்கிறார்.

எதோ ஒரு காரணத்தினால் கண்ணனுக்கு எதிர்பாராத விபரீதம் ஏற்படுகிறது. இப்பொழுது அந்த குடும்பம் தடுமாற்றம் அடைகிறது. அந்த குடும்பத்தில் வருமான ஈட்டக் கூடிய ஒரே நபர் அவர்தான். அடுத்த மாதம் பிறந்தால் , மியூச்சுவல் பண்ட் முதலீடு ,   வீட்டுத் தவணை என்று எல்லாமே வரிசையில் நிற்கும். அவர் மனைவி என்ன செய்வார் ? இது போன்ற நேரத்தில்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் உதவிக்கரம் அருமையாக நீட்டுகிறது.

நீங்கள் கேட்கலாம் , எண்டோவ்மென்ட் பாலிசி உதவாதா ? என்று. உதவும் , 3 முதல் 5 மாதங்களுக்கு உதவும் . அதன் பிறகு ?

கண்ணன் எடுத்த டேர்ம் இன்ஷூரன்ஸ் காரணாமாக அவரது குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி கிடைக்கிறது. இந்த 1 கோடியை சரியான முறையில் முதலீடு செய்தால் கண்ணன் சம்பாதித்த பணம் வட்டியாகவே  கிடைக்கும்.

ஒருவேளை இறப்பு ஏதும் இன்றி பாலிசிதாரர் உயிரோடு இருந்தால், கட்டிய பீரிமியம் ஏதும் கிடைக்காது. ஆனால் சில கம்பெனிகள் அதையும் கொடுக்கிறது சில நிபந்தனைகளோடு. அது என்ன ? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.






Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு