எண்டோவ்மென்ட் பாலிசி


எண்டோவ்மென்ட்
எண்டோவ்மென்ட் பாலிசி


நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோவ்மென்ட் பாலிசி (Endowment policy). ஏன் இந்த பாலிசி அதிகமாக எடுக்கப்படுகிறது என்றால் ஒரு வித புரிதல் இல்லாதலும் மற்றும் இதை ஒரு முதலீடு என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலும் ஆகும். இதன் நிறை குறைகளை பிறகு பார்ப்போம். முதலில் எண்டோவ்மென்ட் பாலிசி என்றால் என்னவென்று பாப்போம்.

இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது.


உதாரணமாக கண்ணன் என்பவர் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி காட்டுகிறார் என்றால் ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பார்.  பிறகு 20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதேனும் உயிரிழப்பு நேரிட்டால், காப்பீட்டுத் தொகை அவரது குடும்பத்தாருக்குச் சென்றடையும்.  ஒரு வேளை  பாலிசிதாரர் பாலிசி முடியும் வரை உயிரோடு இருந்தால், முதலீடு செய்த பணத்துடன், அதன்மூலம் வரும் லாபத்தையும் சேர்த்து பாலிசிதாரருக்கு கிடைக்கும்.

அது எல்லாம் சரி , இந்த எண்டோவ்மென்ட் பாலிசி நல்லதா ? அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்...







Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு