காப்பீடு சிறு விளக்கம்
![]() |
| காப்பீடு |
காப்பீடு அல்லது இன்சூரன்ஸ் , ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆபத்து , சாதி மத பேதம் பார்ப்பது இல்லை , ஆண் பெண் இன வேறுபாடு பார்ப்பது இல்லை. எப்பொழுது வேன்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. உயிர் சேதம் போன்ற ஆபத்து சில நேரங்களில் ஒரு குடுமபத்தின் தலை எழுத்தையே மாற்றி விடுகிறது. இது போன்ற சமயத்தில் நல்ல பாதுகாப்பை காப்பீடு வழங்குகிறது.
காப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனத்திற்கும், வாடிக்கையாளரான பாலிசி தாரருக்கும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவேளையில் அவர்கட்டும் பிரீமியம் தொகையிலிருந்து அவருக்கு ஏற்படும் ஆபத்தால் அவர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவிதான் காப்பீடு.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், காப்பீடை ஒரு பொழுதும் முதலீடாக பார்க்க கூடாது. முதலீடு என்ற நோக்கத்தில் பார்க்கும் பொழுது பெரும்பாலானவர்கள் அதை எடுக்க தவறி விடுகிறார்கள்.
காப்பீட்டில் பல வகை இருக்கிறது. ஒவ்வொரு காப்பீடும் என்னவென்று தெளிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Comments
Post a Comment