டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆவணங்கள்


ஆவணங்கள்
 டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆவணங்கள்

ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டாத ஒரு நபருக்கு  டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடப்பது மிகவும் கடினம். உதாரணமாக,  வருமானம் ஈட்டாத மகன், மகளுக்கும்,குடும்பத் தலைவி ஆகியோருக்கு கிடைப்பது கடினமே. மாணவர்கள் எடுக்க முடியாது. ஆனால் சம்பாதிக்கும் ஒருவருக்கு எளிதாக கிடைத்து விடும்.

ஆவணங்கள்:

 டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு கீழ்கண்ட  ஆவணங்கள் தேவைப்படுகிறது.

1.வருமானத்துக்கான ஆதாரம் (சம்பளச் சான்றிதழ், ஃபார்ம் 16, வருமான வரி தாக்கல் ஆதாரம்)

2. அடையாள அட்டை மற்றும் முகவரி ஆதாரம் (அரசு அங்கீகாரம் பெற்றது)

3. வயது சான்றிதழ் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ்)

இது போக கேஒய்சி விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க சொல்வார்கள்.


இணையதளம் மூலமாக எடுக்கும் பொழுது சில நேரங்களில் சலுகை (Offer - Corporate Employee offer) கொடுக்க வாய்ப்பும் உண்டு. அதை எடுக்கும் முன்பு விசாரித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் பீரிமியம் சற்று சிறிது குறைய வாய்ப்பு உண்டு.

பாலிசி எடுக்கும் முன்பு ஒரு முறை பொறுமையாக எல்லா விதி முறைகளையும்(Terms and Conditions) படித்துக் கொள்வது நல்லது.





Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு