அந்நிய முதலீடு

அந்நிய முதலீடு
அந்நிய முதலீடு

எப் ஐ ஐ (Foreign Institutional Investor) FII - என்பது வெளி நாடுகளில் இருக்கும் தனி நபர் அல்லாத ஒரு நிறுவனம் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது ஆகும். இவர்கள் மூலமாக இந்திய பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நல்ல தரமான கம்பெனியின் பங்குகள் நல்ல விலைக்கு வாங்க தொடங்கும் மாற்றம் ஏற்பட்டது.

இவர்கள் ஒரு கம்பெனியில் முதலீடு செய்கிறார்கள் என்றால், அந்த கம்பெனி பற்றி முழு விபரமும் தெரிந்து கொண்டுதான் வாங்குவார்கள். இவர்கள் முதலீடு செய்வது என்று முடிவெடுத்தால் சில கோடி கணக்கில்தான் முதலீடு செய்வார்கள்.

சரி, இவர்கள் இஷ்டத்திற்கு முதலீடு செய்யலாமா என்றால் முடியாது. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்யும். அது மட்டும் அல்லாது, ரிசர்வ் வங்கியும் இவர்கள் முதலீடு செய்யும் அளவை கண்காணித்துக் கொண்டு இருக்கும். இன்னொரு விஷயம் நினைவில் கொள்ள வேண்டியது, இவர்கள் சிறு லாபத்திற்காக பெரும்பாலும் விற்பதில்லை.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு