Posts

Showing posts from January, 2019

பங்குச் சந்தை அறிமுகம்

Image
பங்குச் சந்தை அறிமுகம்  பங்குச் சந்தை என்றவுடனே பலர் இது சூதாட்டம் என்று செய்வது உண்டு. சில படித்தவர்காளுக்கே மட்டும் புரியும், என்று சொல்வது உண்டு. இப்படி ஒவ்வ்ருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வது உண்டு. ஆனால் உண்மை அது வல்ல. ஆம், பங்குச் சந்தை என்பது அவ்வளவு பெரிய புரிய இயலாத ஒன்றும் அல்ல. சிறிய அளவில் கணக்கு போடும் திறமை, பங்குச் சந்தைக்கு என்று சில அடிப்படை விதிகளை புரிந்து கொள்ளுதல் போதுமானது. சரி , உண்மையிலே இந்த பங்குச் சந்தை முதலீடு பாதுகாப்பானதா? பாதுகாப்பு இல்லைதான். எந்த வித ஆராய்ச்சி இல்லாமல் தொடரும் முதலீடு பெரும்பாலும் நஷ்டமாகவே முடியும். எல்லோராலும் இந்த பங்குச் சந்தையை சரியாக கணித்து விட முடியுமா? 100 சதவிகிதம் கணித்து விட முடியாது. சில நேரங்களில் கணிப்புகளை தாண்டியும் அதன் வேலையை காட்டி விடும். பிறகு நஷ்டம் தான் ஏற்படும். உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனம் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் முதலீடு தொகையோ உங்களிடம் சற்று குறைவாக இருக்கிறது. இப்பொழுது உங்களுக்கு தேவைப்படும் பணத்தை மக்களிடம் இருந்து பெற முயற்சிப்பதுதான் பங்குச் சந்தை. இன்னும் சற்று ...

இன்சூரன்ஸ் வரிச் சலுகை

Image
வரிச் சலுகை 1. டேர்ம் இன்சூரன்சுக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத்துக்கு சில நிபந்தனைக்கு உட்பட்டு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும். இந்த வரி சலுகை 80சி யின் கீழ் வரும். 2. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத் தொகைக்கு 80டி பிரிவின் கீழ் ஒரு நிதி ஆண்டில், தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.25,000 வரை வருமான வரி விலக்கு பெறலாம். 3. உங்கள் பெற்றோருக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்பட்சதில் அதற்கும் ஆண்டுக்கு ரூ.25,000 வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. 4. இது போக எண்டோவ்மென்ட் பாலிசியும் 80சி யின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற முடியும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் - ரைடர்ஸ்

Image
 டேர்ம் இன்ஷூரன்ஸ் - ரைடர்ஸ் நீங்கள் ரூபாய் 10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு ஒன்று எடுக்க விரும்புகிறீர்கள் என்றால்  அதற்கு என்று தனியாக ஒரு பாலிசி எடுக்க தேவை இல்லை. அதாவது நீங்கள் தனியாக ஒரு பாலிசி எடுத்தால் அதற்கு ஒரு  பெரும்பாலும் ரூ.5,000 முதல் 15000 என்று ஒதுக்க வேண்டும். இது போன்ற நேரத்தில் நீங்கள் எடுக்க போகும்  டேர்ம் இன்ஷூரன்ஸ் உடன் ரைடர்ஸ் என்ற ஒரு வசதி உள்ளது. அதில் விபத்துக் காப்பீடு கூடுதலாக உள்ள வசதியை தேர்ந்தெடுத்து அதனுடன் கூடுதலாக சொற்ப பணத்தை செலுத்தினாலே  விபத்துக்கு காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். இது போக சில தீவிர நோய்களுக்கான காப்பீடு வசதியையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். சில நிறுவனங்கள் 50 வகையான நோய்களுக்கு கூட இந்த வசதியை வழங்குகிறது. இதன் மூலம் குறைவான பிரீமியம் செலுத்தி கூடுதல் கவரேஜ் பெற முடியும். ஏதேனும் நோயினால் அல்லது விபத்து காரணமாக உறுப்புகள் பலமாக சேதம் அடைந்தாலும் தொடர்ந்து பீரிமியமும் கட்ட தேவை இல்லை என்ற வசதியும் இருக்கிறது. அதற்கு இன்னும் சற்று கூடுதல் செலுத்த வேண்டி இருக்கும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆவணங்கள்

Image
 டேர்ம் இன்ஷூரன்ஸ் ஆவணங்கள் ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டாத ஒரு நபருக்கு  டேர்ம் இன்ஷூரன்ஸ் கிடப்பது மிகவும் கடினம். உதாரணமாக,  வருமானம் ஈட்டாத மகன், மகளுக்கும்,குடும்பத் தலைவி ஆகியோருக்கு கிடைப்பது கடினமே. மாணவர்கள் எடுக்க முடியாது. ஆனால் சம்பாதிக்கும் ஒருவருக்கு எளிதாக கிடைத்து விடும். ஆவணங்கள்:  டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு கீழ்கண்ட  ஆவணங்கள் தேவைப்படுகிறது. 1.வருமானத்துக்கான ஆதாரம் (சம்பளச் சான்றிதழ், ஃபார்ம் 16, வருமான வரி தாக்கல் ஆதாரம்) 2. அடையாள அட்டை மற்றும் முகவரி ஆதாரம் (அரசு அங்கீகாரம் பெற்றது) 3. வயது சான்றிதழ் (பள்ளி மதிப்பெண் சான்றிதழ்) இது போக கேஒய்சி விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க சொல்வார்கள். இணையதளம் மூலமாக எடுக்கும் பொழுது சில நேரங்களில் சலுகை (Offer - Corporate Employee offer) கொடுக்க வாய்ப்பும் உண்டு. அதை எடுக்கும் முன்பு விசாரித்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் பீரிமியம் சற்று சிறிது குறைய வாய்ப்பு உண்டு. பாலிசி எடுக்கும் முன்பு ஒரு முறை பொறுமையாக எல்லா விதி முறைகளையும்(Terms and Conditions) படித்துக...

டேர்ம் இன்ஷூரன்ஸ் - மருத்துவப் பரிசோதனை

Image
டேர்ம் இன்ஷூரன்ஸ் - மருத்துவப் பரிசோதனை இந்த பக்கத்தில் நாம் மருத்துவப் பரிசோதனை, கட்டண வசதி பற்றி பார்க்கலாம். உங்களுக்கு புகை பிடிக்கும் அல்லது குடிப் பழக்கம் ஆகியவை ஏதாவது இருப்பின் ரிஸ்க்கின் அளவு அதிகமாகும். மேலும் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தும் பிரீமியத் தொகை மாறும். எனவேதான் முடிந்தவரை டேர்ம் இன்ஷூரன்ஸ் இளம் வயதிலே எடுக்க வேண்டும். இந்த மருத்துவ பரிசோதனை எல்லாம் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். டேர்ம் இன்ஷூரன்ஸுக் கான பிரீமிய தொகையை நீங்கள்  நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தும் வசதியான ஈசிஎஸ் (Electronic Clearing system) மூலமாகவோ செலுத்தலாம். இதற்காக எந்தவொரு சேவைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. குறிப்பு: பிரீமியம் தொகையை மாதாமாதம் கட்டுவதைக் காட்டிலும் ஆண்டுக்கு ஒருமுறை கட்டுவது நல்லது.

டேர்ம் இன்ஷூரன்ஸ் - கவரேஜ் மற்றும் பிரீமியம்

Image
டேர்ம் இன்ஷூரன்ஸ் - கவரேஜ் மற்றும் பிரீமியம் டேர்ம் இன்ஷூரன்ஸ் நல்லா இருக்குற மாதிரி இருக்குது, மேற்கொண்டு தெளிவா பேசுவோம். டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க போறோம் . நாம் கேட்கிற கவரேஜ் தொகை பெரும்பாலும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏன் ? டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன்பு ,  பாலிசி எடுக்கும் நபரின் வருமானம், வயது, உடல்நிலை, வேலை ரிஸ்க், தனிப்பட்ட செலவுகள், குடும்ப செலவுகள் ,கடன்கள், எதிர்கால திட்டங்கள் இப்படி பல விஷயங்களைக் கணக்கில் கொண்டுதான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கவரேஜை நிர்ணயிக்கும். நீங்கள் கொடுத்த தகவல் அதாவது, வயது, வருமானம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து உங்களுடைய கவரேஜ் மற்றும் பீரிமியம் நிர்ணயிக்கப்படும். இன்னும் சில விஷயங்கள் இருக்கிறது அதை அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்

Image
டேர்ம் இன்ஷூரன்ஸ் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன ? இதை என் பெரும்பாலான நிதி ஆலோசகர்கள் பரிந்துரை செய்கிறார்கள். விரிவாக பார்க்கலாம். பீரிமியம் ரொம்ப கம்மியா இருக்கனும் , ஆனால் அதிக  காப்பீடு வேண்டுமா? அப்போ டேர்ம் இன்ஷூரன்ஸ் தான் உங்களுக்கு பொருத்தமா இருக்கும். உதாரணமாக கண்ணன் மாதம் ரூபாய் 50000 சம்பாதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மிகவும் வசதியாக வாழ்கிறார். சரியான முறையில் முதலீடு செய்கிறார் . மியூச்சுவல் பண்ட் மாதம் 10000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.  வீட்டுத் தவணை 15000 செலுத்துகிறார். 5000 ரூபாய் குழந்தை பிடிப்பு என்றும் , 8000 ரூபாய் தங்கத்தில் முதலீடு செய்கிறார். எதோ ஒரு காரணத்தினால் கண்ணனுக்கு எதிர்பாராத விபரீதம் ஏற்படுகிறது. இப்பொழுது அந்த குடும்பம் தடுமாற்றம் அடைகிறது. அந்த குடும்பத்தில் வருமான ஈட்டக் கூடிய ஒரே நபர் அவர்தான். அடுத்த மாதம் பிறந்தால் , மியூச்சுவல் பண்ட் முதலீடு ,   வீட்டுத் தவணை என்று எல்லாமே வரிசையில் நிற்கும். அவர் மனைவி என்ன செய்வார் ? இது போன்ற நேரத்தில்தான் டேர்ம் இன்ஷூரன்ஸ் உதவிக்கரம் அருமையாக நீ...

மணிபேக் பாலிசி திட்டம்

Image
மணிபேக் பாலிசி திட்டம் மணிபேக் பாலிசி திட்டமும் நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள். ஏன் இந்த பாலிசி அதிகமாக எடுக்கப்படுகிறது என்றால் வழக்கமா போல அதே பதில்தான். முதலீடு என்ற ஒரு வார்த்தைதான் காரணம். மணிபேக் பாலிசி என்றால் என்னவென்று பாப்போம். இந்த திட்டத்தில் காப்பீடு செய்யும் நபருக்கு பாலிசி முடியும்வரை அல்லது அந்த நபர் உயிருடன் இருக்கும் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு தொகையினை வழங்கும்.  இது போன்று வழங்குதலை "வாழ்வதற்கான ஆதாயம்" என்று அழைக்கிறார்கள். இந்த திட்டத்தில் எண்டோவ்மென்ட் பாலிசியை விட சற்று அதிகமாக பிரிமியம் செலுத்த வேண்டி இருக்கும். எதிர்பாரதமாக பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் பாலிசி முதிர்வுத்தொகை அவரது குடும்பத்துக்கு சென்றடையும். மேலும் குறிப்பிட்ட இடைவெளி நிதிப்பயன் ஆனது பாலிசி துவங்கிய 5 வது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் பாலிசி முதிர்வுகால முடிவு வரையில் அல்லது பாலிசிதாரரின் இறப்பு வரையில் தொடர்ந்து வழங்கப்படும். பாலிசி கால வரையின்போது இறப்பு நிகழ்ந்தால், அன்றைய தேதி வரை செலுத்திய கட்டணத்திலிருந்து எதுவும் கழிக...

எண்டோவ்மென்ட் பாலிசி

Image
எண்டோவ்மென்ட் பாலிசி நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள் எடுப்பது எண்டோவ்மென்ட் பாலிசி (Endowment policy). ஏன் இந்த பாலிசி அதிகமாக எடுக்கப்படுகிறது என்றால் ஒரு வித புரிதல் இல்லாதலும் மற்றும் இதை ஒரு முதலீடு என்று தவறாகப் புரிந்து கொள்ளுதலும் ஆகும். இதன் நிறை குறைகளை பிறகு பார்ப்போம். முதலில் எண்டோவ்மென்ட் பாலிசி என்றால் என்னவென்று பாப்போம். இதில் நாம் கட்டும் தொகையின் ஒரு பகுதி இன்ஷூரன்ஸாகவும், இன்னொரு பகுதி முதலீடாகவும் செல்கிறது. உதாரணமாக கண்ணன் என்பவர் ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 20 ஆண்டுகளுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி காட்டுகிறார் என்றால் ஒட்டுமொத்தமாக நான்கு லட்சம் ரூபாய் கட்டியிருப்பார்.  பிறகு 20 ஆண்டுகள் கழித்து, கட்டிய தொகை இரு மடங்காகக் கிடைக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதேனும் உயிரிழப்பு நேரிட்டால், காப்பீட்டுத் தொகை அவரது குடும்பத்தாருக்குச் சென்றடையும்.  ஒரு வேளை  பாலிசிதாரர் பாலிசி முடியும் வரை உயிரோடு இருந்தால், முதலீடு செய்த பணத்துடன், அதன்மூலம் வரும் லாபத்தையும் சேர்த்து பாலிசிதாரருக்கு கிடைக்கும். அது எல்லாம் சரி , இந்த எண்...

காப்பீடு சிறு விளக்கம்

Image
காப்பீடு  காப்பீடு அல்லது இன்சூரன்ஸ் , ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆபத்து , சாதி மத பேதம் பார்ப்பது இல்லை , ஆண் பெண் இன வேறுபாடு பார்ப்பது இல்லை. எப்பொழுது வேன்டுமானாலும்  யாருக்கு  வேண்டுமானாலும்  வரும் என்பது அனைவரும் அறிந்ததே.  உயிர் சேதம் போன்ற ஆபத்து சில நேரங்களில் ஒரு குடுமபத்தின் தலை எழுத்தையே மாற்றி விடுகிறது. இது போன்ற சமயத்தில் நல்ல பாதுகாப்பை  காப்பீடு வழங்குகிறது. காப்பீடு  என்பது காப்பீட்டு நிறுவனத்திற்கும்,  வாடிக்கையாளரான பாலிசி தாரருக்கும் ஒரு குறிப்பிட்ட காலஇடைவேளையில் அவர்கட்டும் பிரீமியம் தொகையிலிருந்து அவருக்கு ஏற்படும் ஆபத்தால் அவர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவிதான் காப்பீடு. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், காப்பீடை ஒரு பொழுதும் முதலீடாக பார்க்க கூடாது. முதலீடு என்ற நோக்கத்தில் பார்க்கும் பொழுது பெரும்பாலானவர்கள் அதை எடுக்க தவறி விடுகிறார்கள். காப்பீட்டில் பல வகை இருக்கிறது. ஒவ்வொரு காப்பீடும் என்னவென்று தெளிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தங்க நகை புகார் தெரிவிக்க

Image
தங்க நகை புகார் நீங்கள் வாங்கிய தங்கம் சம்பந்தமாக ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் நீங்கள் இந்திய தர நிர்ணய ஆணையத்தை (பி ஐ எஸ் ) ( BIS - Bureau  of Indian Standards) தொடர்பு கொள்ளலாம். முகவரி கீழே, சி ஐ டி  வளாகம் , நான்காவது குறுக்குத் தெரு, தரமணி , சென்னை - 600 113 044- 22541216 இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீங்கள் கருதினால் , நுகர்வோர் நீதிமன்றம் , நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் பல , தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் ஒரு நூலில் இருந்து எடுக்க பட்டது. படிக்கும் சகோதர சகோதரிகள் இதை இணைய தளம் மூலமாக உறுதி செய்து கொண்டு தொடர்பு கொள்ளவும்.

எந்தெந்த தேவைகளுக்காக கடன் வாங்கலாம்?

Image
எந்தெந்த தேவைகளுக்காக கடன் வாங்கலாம்? எல்லாமே தேவைகள் தான் என்று கடன் வாங்கி வாங்கக்  கூடாது. அத்தியாவசியம் மற்றும் அனாவசியம் இரண்டையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் அல்லது பைக்  வாங்குவது அவசியம்.  இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் அல்லது பைக் போதும். அதிக பாதுகாப்பு வசதி என்று பல விஷயங்களை சிந்தித்து ஆடம்பர கார் வாங்கினால் உங்கள் வருமான எல்லையைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வது என்பது நலம். கல்விக்காக கடன் வாங்கலாம். ஆனால் வாங்கும் கடனை எப்படி திரும்பச் செலுத்தப் போகிறோம்,  படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் நிதானமாக  யோசித்துப் பார்த்து கல்விக் கடன் வாங்குவது நல்லது. சொந்தமாக வீடு இல்லாத பட்சத்தில் வீடு வாங்கலாம். ஆனால் சொந்தமாக வீடு இருந்து இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்குவது நிச்சயம் தவறு. கிடைக்கும் வீடு வாடகை , பண வீக்கம் என்று கூட்டி கழித்து பார்த்தல் நிச்சயம் லாபம் இல்லை. கடன் வாங்குவதே தவறு என்று நிதி ஆலோசகர்கள் ஒரு பொழுதும் சொல்வதில்லை. மாறாக கடன் மூலம் ந...

கடன் வாங்கலாமா ?

Image
Kadan vaangalaama? கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது என்று சொல்லும் அளவிற்குத்தான் இன்றைய சூழ்நிலை பெரும்பாலானவர்களுக்கு அமைகிறது. தேவையான நேரத்தில்  கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் எவ்வளவு வாங்க வேண்டும் , நமது தகுதி என்ன? என்று சில விதி முறைகளையும்  அவற்றை எவ்வாறு முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்று எல்லாம் ஆராய வேண்டும். தற்போதைய உங்களது தொழிலின் நிலை அல்லது மாத வருமானத்தின் நிலை , நீங்கள் வாங்கும் கடன் காலத்தின் அளவு மற்றும் அந்த சமயத்தில் உங்கள் வருமானத்தின் நிலை என்ன என்று சில விஷயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்தியா வசியத்துக்கும், அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் கடன் என்பதன் ஆரம்பப் புள்ளி என்று நிதித் துறை நிபுணர்கள் கூறுவது உண்டு. இதை சரியாகப் புரிந்து கொண்டு உங்கள் கடனை தீர்மானித்தல் நலம். தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் பிறகு உங்களை பல சிக்கலுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு மிக மிக அதிகம்.

ஹால்மார்க் முத்திரை - தங்கம்

Image
Haalmark muthirai in Tamil ஹால் மார்க் முத்திரை என்பது இந்திய தர ஆணையம் (BIS - Bureau of Indian Standards) நகையின் தரத்துக்கு வழங்கும் ஒரு முத்திரை ஆகும். ஆதலால் நாம் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்ய இது பயன்படுகிறது. நீங்கள் வாங்கும் தங்கம் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ  இருந்தாலும் இந்த முத்திரை கண்டிப்பாக இருக்கும். இந்த முத்திரை பற்றி இன்னும் சற்று விரிவாக பார்க்கலாம். கீழே உள்ளவற்றை நீங்கள் கண்டிப்பாக பார்த்து அல்லது கேட்டு தெரிந்து கொண்டு வாங்கலாம் 1. பி ஐ எஸ் முத்திரை  2. தரக் குறியீடு (), உதாரணமாக 916 எனபது 22 கேரட் என்பதைக் குறிக்கும். 3. ஹால்மார்க் முத்திரை பதித்த ஆண்டைக்  குறிக்கும் எழுத்து  4. தரம் சோதனை செய்யப்பட்ட ஆய்வகத்தின் முத்திரை  5. கடையின் முத்திரை அல்லது நகை விற்பனையாளர்  இவ்வாறு பார்த்து வாங்குவதன் மூலம் தங்கத்தின் மீதான உங்கள் முதலீடு ஏமாற்றப்படமால் இருக்கும். இவ்வளவு பார்த்து வாங்கியும் சில நேரங்களில் ஏமாற்றப்பட்ட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் என்ன  செய...

மியூச்சுவல் பண்டு வகைகள் - ஹைபிரிட் ஃபண்ட்

Image
Hybrid Fund in Tamil நாம் இதுவரை சில திட்டங்கள் பார்த்து வந்தோம். எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் முதலீடு செய்யலாம் என்று சில நேரங்களில் நினைக்காத தோன்றும். அப்படி ஒரு நினைப்பு வரும் பொழுது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இந்த ஹைபிரிட் ஃபண்ட். இந்த திட்டம் மட்டும் அல்ல , வேறு எந்த திட்டமாக இருந்தாலும் , உங்களுக்கு போதிய தெளிவு இல்லாத பட்சத்தில்  நீங்கள் ஒரு நிதி ஆலோசகரை ஆலோசித்து முடிவு எடுங்கள்.  நாம் ஏற்கனவே ஈக்விட்டி ஃபண்ட் , டெப்ட் ஃபண்ட் , கோல்ட் ஃபண்ட் , லிக்விட் ஃபண்ட் என்று சில திட்டங்கள் உள்ளன என்று பார்த்தோம்.  இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் முதலீடு செய்வார்கள் , இதைத்தான் ஹைபிரிட் திட்டம் என்று அழைக்கிறார்கள். இதில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் இரண்டு   திட்டங்களின் நன்மையையும் பெற முடியும். அதே நேரத்தில் அதற்கு எதிர் மறையும் நடக்க வாய்ப்புண்டு. பெரும்பாலும் ஈக்விட்டி மற்றும் டெப்ட் அல்லது டெப்ட் மற்றும் தங்கம் ஆகிய இரண்டு சொத்துக்களில் முதலீடு செய்யும் சில திட்டங்கள் அதிகம் இருக்கின்றன. ஈக்விட்டி, டெப்ட் மற்...

மியூச்சுவல் பண்டு வகைகள் - ELSS ஃபண்ட்கள்

Image
ELSS Tamil ELSS என்பது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் (Equity Linked Savings Scheme) எனப்படும். இது வருமானவரிச் சட்டம் 1961 -இன் பிரிவு 80C -இன் கீழ் ரூ. 1.5 இலட்சம் வரை வரிவிலக்கு பெறுவதற்கு  உதவுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு ரூபாய் 50,000 முதலீடு செய்து இருக்குறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் முதலீடு செய்த தொகை, உங்களின் மொத்த வரிக்குரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்படும்.  இதனால் உங்கள் வரிசுமை குறைக்கப்படும். இது மூன்று வருடங்கள் லாக்-இன் காலத்தை கொண்டு செயல்படும். SIP எனப்படும் (Systematic Investment Plan) மாத மாதம் முதலீடு செய்யும் வசதி உண்டு. இது அதிக பட்சமாக ₹ 1.5 இலட்சம் வரை முதலீடு செய்து வரிவிலக்கு பெறலாம். மூன்று வருடங்கள் லாக்-இன் காலம் என்பதால் உங்கள் பண்ட் மேனஜரால் உங்கள் முதலீடை நிச்சயம் ஓரளவு லாபம் சம்பாதித்து தர முடியும்.

மியூச்சுவல் பண்டு வகைகள் - ஈக்விட்டி ஃபண்ட்கள்

Image
Equity Fund In Tamil ஈக்விட்டி ஃபண்ட்கள் என்பது , முதலீட்டின் பெரும் பகுதியை நிறுவனங்களின் பங்குகளில் ( Company Shares ) முதலீடு செய்கின்ற ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இவை குரோத் ஃபண்ட்கள் ( Growth Fund) எனவும் அழைக்கப்படுகிறது. இதை மிக எளிதாக புரிந்து கொள்ள, உங்களுக்குத் தெரிந்த ஒரு பிரபலமான கம்பெனி ஒன்று பங்குச் சந்தையில் நன்றாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அதே போன்று ஒரு கம்பெனியில் முதலீடு செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களுக்கு பங்குச் சந்தை பற்றிய போதிய தெளிவின்மை காரணமாக முதலீடு செய்ய யோசிப்பீர்கள். இது போன்ற நேரத்தில் நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம். உங்கள் ஃபண்ட் மேனேஜர் உங்களுக்காக அலசி ஆராய்ந்து நல்லதொரு கம்பெனியில் முதலீடு செய்வார். முதலீடு செய்த கம்பெனி நல்லதொரு லாபத்தை அடையும் பொழுது , அதில் ஒரு பாகத்தை உங்களுக்குத் பிரித்து கொடுக்கும். கம்பெனி நஷ்டம் அடையும் பட்சத்தில் உங்கள் பணமும் இரக்கம் காணும், அதாவது நீங்களும் நஷ்டத்திற்கு உள்ளாவீர்கள். உங்கள் முதலீடு நீண்ட காலம் என்றால...

மியூச்சுவல் பண்டு வகைகள் - டெப்ட் ஃபண்ட்கள்

Image
Debt Fund in Tamil டெப்ட் ஃபண்ட்(Debt Fund)  என்பது  கார்ப்பரேட் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் டெப்ட் செக்யூரிட்டீஸ் மற்றும் பணச்சந்தைப் பத்திரங்கள் போன்ற நிலையான வருமானம் அளிக்கும் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய ஒரு  திட்டமாகும். இதை இன்கம் ஃபண்ட்ஸ் அல்லது பாண்டு ஃபண்ட்கள் என்றும் அழைக்கலாம். பிற ஃபண்ட்களோடு ஒப்பிடும் பொழுது ஓரளவு நிலையான வருமானம் , சற்று அதிகமான பாதுகாப்பு போன்றவை இதன் முக்கிய நன்மை ஆகும்.  நீங்கள் சிறிய வருமானத்தை விரும்பக்கூடிய மற்றும்  ரிஸ்க் (அபாயம் ) விரும்பாதவர் என்றால் உங்களுக்கு ஏற்றவை இந்த டெப்ட் ஃபண்ட்கள். சந்தையைப் பொறுத்தவரை இதன் ஏற்ற இறக்கங்கள் குறைந்த அளவிலேயே இருக்கும்.

மியூச்சுவல் பண்டு வகைகள் - லிக்விட் ஃபண்ட்கள்

Image
லிக்விட் ஃபண்ட் மியூச்சுவல் பண்டில் சில வகைகள் உள்ளது. ஒவ்வொன்றும்  ஒவ்வொரு காரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. நாம் அந்த ஒவ்வொரு வகையையும் எவ்வாறு தெரிந்து கொண்டு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். 1. லிக்விட் ஃபண்ட்கள் (Liquid Fund) உங்களிடம் சிறிது பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த பணம் உங்களுக்கு ஒரு 2 நாட்கள் அல்லது ஒரு 7 நாட்கள் அல்லது ஒரு மாதம் கூட தேவைப்படாமல் உங்களிடம் இருக்கலாம். இது போன்று சமயத்தில் வெறும் இரண்டு நாட்கள் என்றாலும் கூட நீங்கள் லிக்விட் ஃபண்ட் முலமாக முதலீடு செய்து சில லாபம் பெறலாம், பெரும்பாலும் வங்கி பிக்சட் கணக்கிற்கு ஈடாக லாபம் பெறலாம். சில முக்கிய விஷயங்கள்: குறுகிய காலம் என்றால் மட்டுமே இதை தேர்வு செய்ய வேண்டும். நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதல்ல. நீங்கள் செய்யும் முதலீட்டின் மதிப்பு பெரும்பாலும் குறைவதில்லை. லாக் இன் காலம் கிடையாது. மேற்சொன்ன இரண்டு விஷங்களை பார்க்கும் பொழுது இது வங்கி பிக்சட் டெபாசிட் போலவே தோன்றும். ஆனால், வங்கி போன்று இங்கு லாகின் (Lock in ) கிடையாது. நினைத்த நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். குறிப்...

பண வீக்கத்தின் வகைகள்

Image
Types of Pana veekam பண வீக்கத்தின் வகைகளை பார்க்கும் முன் பண வீக்கம் 8 % என்று வைத்துக் கொண்டால் எல்லா பொருளுமே 8 % விலை ஏற்றம் என்று பொருள் அல்ல. உதாரணம் , கச்சா எண்ணெய் விலை இதனைத் தாண்டியும் பல மடங்கு, அதவாது 25 % அளவு கூட உயர்ந்து இருக்கும். இந்தியாவினைப் பொறுத்தவரை , மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை வாரந்தோறும் வெள்ளியன்று இந்த பணவீக்க விகிதத்தை வெளியிடும். இதனை Wholesale Price Index என்று சொல்வார்கள். Wholesale Price Index - மொத்தம் மூன்று குறியீடுகளை உள்ளடக்கிய ஒரு  பொதுவான விலைவாசிக் குறியீடு. - உணவுப் பொருள்கள் (தானியங்கள் - Food Items), உணவு வகையைச் சாராத பொருள்கள் (Non-Food Items), தாதுப்பொருள் (Minerals) போன்றவை முதன்மை பொருட்களாகக் (Primary Articles)கொண்டு கணக்கிடப்படும். - மின்சாரம், எரிபொருள் போன்றவற்றிற்கான தனிக் குறியீடு - உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கான குறியீடு (ஜவுளி, உலோகங்கள்) 2 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே உள்ள பணவீக்கத்தை இந்திய அரசு மிதமான வீக்கம் என்று சொல்கிறது. மிகைவீக்கம். இது அசாதாரண மற்றும் எளிதில் கட்டுப்படுத்த ...

பணவீக்கம்

Image
Pana Veekam நீங்கள் ஒவ்வொரு முதலீடு மேற்கொள்ளும் பொழுதும் நிதி ஆலோசகர்கள் பண வீக்கத்தை கணக்கில் கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். ஏன்  இந்த பண வீக்கத்தை கணக்கில் கொள்ள வேண்டும் ? முதலீடு செய்யும் பொழுது பண வீக்கத்தின் முக்கியத்துவம்தான் என்ன ? வழக்கம் போல ஒரு சிறு உதாரணம் கொண்டு ஆரம்பிக்கலாம். அரசு பண வீக்கம் 8% அறிவிக்கிறது என்று வைத்துக் கொண்டால், 100 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை , 108 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனைதான் சுருக்கமாக பண வீக்கம் என்று சொல்கிறார்கள். பொருட்களின் விலைக்கும், பணத்தின் மதிப்பிற்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் தான் பணவீக்கம் என்று சொல்கிறார்கள். இவ்வாறு பண வீக்கம் ஏற்படும் பொழுது , பொருட்களின் விலை ஏறும். அதனால்  நம்முடைய வாங்கும் சக்தி குறையும்.  இன்னும் ஓர் உதாரணம். ஒரு பொருளுக்கான தேவை அதிகரிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த பொருள் குறைவாக இருக்கிறது. இது போன்ற சூழலில் அந்த பொருளின் விலை உயரும். வெங்காயம் விலை சற்று அதிகம் என்று வைத்துக் கொள்வோம். இதனால் மக்கள் இதை மிகவும் குறைவாக வாங்குவார்கள். எனவே...

வருமான வரி சலுகை

Image
Tax Savings வருட வருடம் வருமான வரி செலுத்துகிறோம், ஆனால் 80சி தவிர வேறு எதுவும் நமக்கு பெரிதாக தெரிவதில்லை. சரி , வேறு என்ன வழி எல்லாம் இருக்கிறது என்று பாப்போம். 1. வருமான வரிச்சட்டம் 80CCD (1B)  பிரிவுபடி, என்.பி.எஸ் - ல் முதலீடு செய்யும் பொழுது 50,000 ரூபாய்வரை வரிக்கழிவு பெறலாம். 2. வருமான வரிச் சட்டம் 80U-யின் படி , உடல் ஊனத்தால் துன்பப் படுபவர்களுக்கு  ரூ.75,000 வரையிலும், மிகவும் அதிகமாகத் துன்பப்படுபவர்களுக்கு ரூ.1,25,000 வரையிலும் வருமான வரிக்கழிவு பெறலாம். 3. வருமான வரிச் சட்டம் 80E பிரிவின்படி, எட்டு ஆண்டுகள் வரை நீங்கள் வாங்கிய கல்விக் கடனுக்காகச் செலுத்தப்படும் வட்டியை வரிக்கழிவில் சேர்த்து பலன் பெறலாம் . 4. பிறரைச் சார்ந்து வாழும் உடல் ஊனமுற்றவர்களில் 40-80% வரை ஊனமுற்றவர்கள் ரூ.75,000 வரையிலும், 80 சதவிகிதத்துக்கு மேல் ஊனமுற்றவர்கள் ரூ.1,25,000 வரையிலும் வருமான வரிச் சட்டம் 80DDB-யின்படி மருத்துவச்செலவுகளுக்கு வரிக்கழிவு பெற்று பயன் பெறலாம். 5. மூத்தக் குடிமக்கள் என்று இருப்பின் , வருமான வரிச் சட்டம் 80-TTB பிரிவின்படி, ரூ.50,000 வரை தங்...

பட்ஜெட் வைத்து முதலீடு

Image
ஒவ்வொரு வருடமும் கடந்து போகிறது, ஆனால் சேமிப்பு,  முதலீடு என்று எதுவும் அதிகரிக்கவில்லையா ? தவறு எங்கே நடந்தது  என்று கண்டு பிடியுங்கள். பட்ஜெட் என்று ஒன்று போட்டால் , நிச்சயம்  நல்வழி பிறக்கும்.  குறிப்பு - முறையாக கடைபிடிக்க வேண்டும். பட்ஜெட்டை எப்படித் தயார் செய்வது, அதைத் தயார் செய்யும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவோம்.   உதாரணத்தோடு விளக்கும் பொழுது எல்லாமே அழகாக புரியும் என்ற நம்பிக்கையில் இதை தொடர்கிறோம்.  எவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் வீடு வாடகை இ எம் ஐ  மளிகை செலவு  கல்விச் செலவு  மருத்துவச் செலவு போக்குவார்த்துச் செலவு  மின்சாரக் கட்டணம்  இதர செலவுகள் ( கேபிள் , பொழுதுபோக்கு ) எளிதாக புரிந்து கொள்ள அட்டவணையோடு பார்க்கலாம். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்காக பட்ஜெட் மாத வருமானம் 45000 படி , சம்பளம் 45000 540000 செலவுகள் வீடு வாடகை 10000 120000 இ எம் ஐ 5000 60000 மளிகை செலவு 10000 120000 கல்விச் செலவு 4000 48000 மருத்துவச் ...

புதிதாக எடுத்த காப்பீடு பிடிக்கவில்லையா ?

Image
காப்பீடு பிடிக்கவில்லையா? புதிதாக எடுத்த காப்பீடு உங்களுக்கு திருப்தி தர வில்லை என்றாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தினால் உங்களுக்கு ஒத்து வரவில்லை என்றாலோ நீங்கள் அந்த காப்பீடை திருப்பி கொடுக்க முடியும்.  நீங்கள் ஏதேனும் பிரீமியம் கட்டி இருந்தால், முழு பணமும் எந்த வித கட்டணும்மும் கழிக்காமல் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும்.  ஆனால் இதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு, அதாவது காப்பீடு கிடைத்த நாளிலிருந்து 15 நாள்களுக்குள் இதை செய்தால் மட்டுமே சாத்தியம். இதை இலவச பார்வை காலம் (Free looking period) என்று சொல்வார்கள். இது போன்ற சில விதி முறைகள் இருந்தாலும், பல முறை சிந்தித்து தெளிவு பெற்ற பிறகே, சரியான காப்பீடு தேர்வு செய்தல் புத்திசாலித்தனம்.

வங்கி முதலீடு | Bank investment

Image
வங்கி முதலீடு வங்கி முதலீடு என்றாலே நினைவுக்கு வருவது பிக்ஸட் டெபாசிட் தான். இந்த திட்டமானது ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியைத் தரும். இதன் வட்டி விகிதம் பெரும்பாலும் அதன் குறிப்பிட்ட  வரை மாறுவதில்லை. ஆனால் சில வங்கிகள் இதற்கு மாறும் வட்டி விகிதத்தைத் (floating rate) பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு காலாண்டுக்கும் இந்த வட்டி விகிதத்தை அந்த குறிப்பிட்ட வங்கியானது அறிவிக்கும். தற்பொழுது பெரும்பாலும் சேமிப்புக் கணக்கு (savings bank account) வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பிக்ஸட் டெபாசிட்கள் தான் முதலீட்டாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் கிடைக்கும் வட்டி அதிகம், அதிலும் 60 வயதைத் தாண்டியவர்களுக்கு ( ) 0.50 சதவீதம் அதிக வட்டியும் வங்கிகள் கொடுக்கிறது.  சரி, அப்படியென்றால் எல்லா முதலீடையும் இதில் முதலீடு  செய்யலாமா ? கூடாது. முதலீட்டை எப்பொழுதுமே தனித்தனியாக நமது தேவைக்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.

ரியல் எஸ்டேட் குறுகிய கால முதலீடா அல்லது நீண்ட கால முதலீடா ?

Image
neenda kaala or kurukiya kaala muthaleedu கண்டிப்பாக குறுகிய காலத்தில் லாபம் எண்ணி  ரியல் எஸ்டேட்  முதலீடு செய்வது மிகவும் தவறான விஷயம். இதோ அதற்கான விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. எந்த ஒரு முதலீடு செய்தாலும் பண வீக்கம் என்ற ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எல்லா நிதி ஆலோசகர்களின் முக்கியமான கருத்து அல்லது அறிவுரை. பணவீக்கம் என்றால் என்னவென்று நாம் ஏற்கனவே வேறு ஒரு பகுதியில் பார்த்து விட்டோம். 1. முத்திரைக் கட்டணம் 7% சதவிகிதத்தை யாரும் நினைவில் வைப்பது இல்லை. 2. 1 % பதிவுக் கட்டணத்தையும் யாரும் நினைவில் வைப்பது இல்லை. 3. ஜி எஸ் டி என்ற ஒன்றையும் நினைவில் இல்லை. 4. இதையும் தாண்டிய சில இதர செலவுகள் ( லீகல் செக் ,  வீடு கடன் வட்டி , இன்னும் பல ) மேற்கண்ட எல்லாம் சேர்ந்து ஒரு 15% என்று வைத்துக் கொண்டால் கூட, நீங்கள் வாங்கிய சொத்து இந்த 15% தாண்டி விலை ஏற வேண்டும். நீண்ட கால முதலீடாக இருக்கும் பட்சத்தில் இந்த விலை ஏற்றம் மெதுவாக ஏறி ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும். எனவே , குறுகிய கால முதலீடு ரியல் எஸ்டேட்டில் ஒரு நல்ல முதலீடாக அமைய வாய்ப்பு மிக...

ரியல் எஸ்டேட் | Real estate

Image
Real Estate in Tamil ஒரு காலத்தில் அதாவது 2008 வருடத்திற்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறந்தது. அந்த வருடத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பொருளாதார சரிவு எல்லாரும் அறிந்ததே. அமெரிக்காவின் தாக்கம் இந்தியாவினையும் பெரிதாக பாதித்தது. அதற்கு காரணம் ஐடி வருமானம் பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்திருப்பதுதான். சரி, விஷயத்திற்கு வருவோம். உண்மையிலே வீடு வாங்குவது ஒரு நல்ல முதலீடா ? உங்களுக்கு ஏற்கனவே ஒரு சொந்த வீடு இருக்கும் பட்சத்தில் நீங்கள் இன்னொரு வீடு வாங்குவது அவ்வளவு சரியான முதலீடு அல்ல. அப்படியென்றால் ரியல் எஸ்டேட் ஒரு லாபகரமான முதலீடு இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அதிலும் நல்ல லாபம் பார்க்கலாம் . எப்படி என்று இனி வரும் பக்கத்தில் தொடர்ச்சியாக பார்க்கலாம்.

தங்கம் எப்பொழுது வாங்குவது?

Image
Gold vangum neram தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு உடனே கடைக்கு சென்று உங்கள் கிரெடிட் கார்டு எடுத்து வாங்கி வீடுவீர்களா ? நிச்சயம் உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான நாலு பேரிடம் விசாரிப்பீர்கள். எந்த கடையில் வாங்குவது ? இப்பொழுது வாங்க சரியான நேரமா ? என்று எல்லாம் கண்டிப்பாக கேள்வி கேட்பீர்கள். உலகத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் அதிக அளவு தங்கம் வாங்குகிறார்கள். அதே இந்தியாவில், தென் இந்தியா ஓரளவு அதிகமாக தங்கம் வாங்கும் இடம். இந்தியாவில் இந்த பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குவது சற்று அதிகமாக இருக்கும். எனவே பண்டிகை காலங்களில் தங்கத்தின் விலை சற்று அதிகமாகும் வாய்ப்பு மிக அதிகம். உதாரணம் , இந்த தீபாவளி , பொங்கல், இன்னும் பல பண்டிகைகள் .... அதிலும் குறிப்பாக , அட்சய திருதியை நாளில் சொல்லவே வேண்டாம். அன்று ஒரு சிறு தங்கமாவது வாங்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் பல பேர். உண்மையில் அன்று தங்கம் வாங்கக் கூடாது. அது ஏன் என்று பிறகு விளக்கமாக பார்க்கலாம். எனவே இந்த பண்டிகை மற்றும் சுப காரியங்கள் நடை பெறா  நாள்களில் தங்கம் விலையை பிற மாதங்களோடு ஒப்பிட்டு குற...

தங்கம் - சில சந்தேகங்கள்

Image
Gold doubts தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை நம்மில் பல பேருக்கு இருக்கிறது. ஆனால் சில எண்ணங்கள் வந்து நம்மை குழப்பி விடும். அது என்னவென்று கேட்கிறீர்களா ? இதோ .... 1. எப்பொழுது வாங்க வேண்டும்? 2. இந்த சேதாரம் என்றால் என்ன ? 3. செய் கூலி என்றால் என்ன ? 4. பழைய நகையை மாற்றும் பொழுது எவ்வளவு கிடைக்கும் ? 5. ஹால் மார்க் முத்திரை என்றால் என்ன ? 6. 916 என்றால் என்ன ? 7. தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா ? நஷ்டமா ? 8. தங்கம் உண்மையிலே ஒரு நல்ல முதலீடா ? இன்னும் பல கேள்விகளுக்கு , நிறைவான பதில்களை நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.