ஹெல்த் பாலிசியின் அவசியம்
ஹெல்த் பாலிசியின் அவசியம் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாக ஹெல்த் பாலிசி எடுக்க வேண்டுமா? இந்த ஹெல்த் பாலிசி அவ்வளவு முக்கியமா என்றால் கண்டிப்பாக முக்கியம் தான். எல்லோருக்கும் செலவு என்பது சொல்லிக் கொண்டோ அல்லது சில திட்டமிடல் மூலம் முன்பே அறிந்து கொண்டு பணம் தயார் செய்து விடலாம். ஆனால், மருத்துவ செலவு என்பது மட்டும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. சிறிய அளவிலான பணம் என்றால் சமாளித்து விடலாம். சில லட்சங்கள் தாண்டி செலவு வந்தால் என்ன செய்வது? இங்குதான் ஹெல்த் பாலிசி தேவைப்படுகிறது. ஏதேனும் ஒரு சிறு ஆபரேஷன் செய்தாலே ஐம்பதாயிரம் தேவைபடுகிறது. இதையும் தாண்டி இதயம் சம்பந்தமான சிகிச்சை , அது இது என்று பிரச்சினை வந்தால் சமாளிப்பது மிக சுலபமான விஷயம் அல்ல. அதையும் தாண்டி பணம் புரட்டி விட்டு திரும்ப அந்த பணத்தை அடைப்பதற்குள் இன்னும் சுமை ஏறி விடுகிறது. இந்த நோய்கள் பற்றிய புள்ளி விவரங்கள் பார்த்தால் இதயம் மேலும் துடிக்க ஆரம்பித்து விடும். எனவே , இது போன்ற நேரத்தில் மெடிகிளைம் மூலமாக பண பிரச்சினைகள் தீர்க்கப்டும். ஹெல்த் பாலிசி அவசியமே!