ரிவர்ஸ் மார்ட்கேஜ்
![]() |
| ரிவர்ஸ் மார்ட்கஜ் |
ரிவர்ஸ் மார்ட்கேஜ் வயதானவர்களுக்கு ஒரு நல்ல பயனுள்ள தேர்வு. ஒரு சிறு உதாரணம் பார்த்து தெளிவு பெறலாம். வயதான தாய் தந்தையரை அவர்களது பிள்ளைகள் கவனிக்கவில்லை அல்லது கைவிட்டு விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர்கள் வசிக்கும் வீடு அவர்களது பெயரில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
இது போன்ற இக்கட்டான நேரத்தில் அந்த வீடு அவர்களை காப்பாற்றும். எப்படி என்றால் , இவர்கள் வீட்டை வங்கியில் அடமானம் வைத்தால், வங்கியானது வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு 15 முதல் 20 வருடம் வரை மாதம் ஒரு தொகையை அந்த வீட்டின் உரிமையாளரான அந்த வயதானவர்களுக்கு கொடுக்கும்.
அந்த குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன், வங்கியானது தொகை அளிக்காது. ஆனால் , அவர்களது காலம் முடியும் வரை அந்த வீட்டில் அவர்கள் வசித்துக் கொள்ளலாம்.
இவர்கள் இரண்டு பேருடைய மறைவுக்குப் பிறகு, கொடுக்கப்பட்ட தொகை , வட்டி என்று எல்லாவற்றையும் வங்கி கணக்கு போடும். பிறகு வங்கியானது அந்த வீட்டை விற்று, வங்கிக்குரிய தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை அவர்களது வாரிசுக்கு கொடுத்து விடும். அவர்களது வாரிசு விரும்பினால் வங்கிக்கு தொகையை செலுத்தி விட்டு அந்த வீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

Comments
Post a Comment