ரிட்டன் ஆன் நெட் ஒர்த்
![]() |
| ரிட்டன் ஆன் நெட் ஒர்த் |
ஒரு கம்பெனி முதலீடு போட்டு அதிலிருந்து எவ்வளவு வருமானம் வருதுன்னு கணக்கு போட்டு பார்ப்பதுதான் இந்த ரிட்டன் ஆன் நெட் ஒர்த் ( Return on Net Worth). கம்பெனி வரி செலுத்திய பிறகு கிடைக்கும் லாபத்தை நிகர சொத்து மதிப்பால் வகுத்து கிடைப்பது வருமானம்.
இதை வைத்து கம்பெனி எந்த அளவுக்கு லாபம் சம்மதித்து இருக்குதுன்னு கண்டுபிடித்து விடலாம். இன்னும் தெளிவாக சொன்னால் , ஒரு கம்பெனியின் ரிட்டன் ஆன் நெட் ஒர்த் அதிகமாக இருக்க வேண்டும்.
இவை எல்லாம் நீங்கள் என்னவென்று தெரிந்தாலே போதுமானது. அந்த கணக்கு போடுவது எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
பங்குச் சந்தையை பொறுத்தவரை இரண்டு விதமான அனாலிசிஸ் (Analysis) உண்டு.
1. பண்டமெண்டல் அனாலிசிஸ் (Fundamental Analysis)
2. டெக்னீகள் அனாலிசிஸ் (Technical Analysis)
இந்த இரண்டு அனாலிசிஸ் செய்வதற்கு அடிப்படை விஷயங்கள் ஆன புக் வேலுயு , பி இ , இ பி எஸ் எல்லாம் தேவைப்படும். எனவே இவை எல்லாம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.எப்படி கணக்கீடு செய்வது என்று தெரிந்து கொள்ள அவசியம் இல்லை.

Comments
Post a Comment