ஹால்மார்க் முத்திரை - சிக்கல்கள்


ஹால்மார்க் முத்திரை - சிக்கல்கள்
ஹால்மார்க் முத்திரை - சிக்கல்கள்


தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஏமாற்றவில்லை என்றுதான் நினைக்கிறோம்.  ஆனால்,  கீழ் வரும் சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும் என்று நமது அனைவருக்கும் தெரிந்ததே. ஒரு நகை தயாரிப்பாளர்  நகையை செய்து முடித்த பின்  நகையின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். சில சோதனைகள் செய்து முத்திரை இட்டு வாங்க வேண்டும் என்பது கட்டாயம். இதில் தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க  கீழவரும் முத்திரைகள் இடப்படும். அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும்.

நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை என்று பார்ப்பது அவசியம். இந்த ஹால்மார்க் முத்திரை போடுவதற்கு சில கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு நகைக்கு ரூ.25   முதல் ரூ.150 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நகையையும் தனித்தனியாக ஹால்மார்க் முத்திரை போட மாட்டார்கள். மொத்தமாக நகைகளை அனுப்பி அனைத்து நகைகளையும் ஹால்மார்க் முத்திரை போட்டு விடுவார்கள். பிறகு, அதிலிருந்து ஏதாவது ஒரு நகையை எடுத்து அதை  சோதனை செய்வார்கள். உரைகல் சோதனை,  எக்ஸ்ஆர்எஃப் மெஷின் சோதனை, ஆசிட் டெஸ்ட் சோதனை என்று சில சோதனைகளை செய்வார்கள். அதன் பிறகு முத்திரை போட்டுத் தருவார்கள்.





Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு