டிரேடிங் டீமேட் கணக்கு

டிரேடிங்
டிரேடிங்  டீமேட் கணக்கு 

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட இந்த டீமேட் அக்கௌன்ட் திறக்க வேண்டும் என்பது கட்டாயம். இது நமது வங்கி கணக்கு போலவே. நாம் வாங்கி விற்கும் பங்கு கணக்குகள் இங்கு டிஜிட்டல் முறையில் இருக்கும்.

இதில் சிறப்பான பல வசதிகள் உண்டு. இது நமது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, டிவிடெண்ட் கிடைக்கும் பொழுது நமது வங்கி கணக்கிற்கே வந்து விடும். இப்பொழுது பெரும்பாலான வங்கிகளே இந்த டீமேட் வசதியை வழங்குகிறது. இது போக , ஜீரோதா , சேர்கான் போன்றவர்களும் இதை வழங்குகிறர்கள்.

டீமேட்  மற்றும்  டிரேடிங் வித்தியாசம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். டீமேட் என்பது வங்கி அக்கவுண்ட்  போலவே ஒரு அக்கவுண்ட். டிரேடிங் என்பது , டீமேட் அக்கவுண்ட்டை வைத்து  நீங்கள் அங்கு செய்யும் வர்த்தகம். இந்த டிரேடிங் செய்யத்தான் நம்மிடமிருந்து கொஞ்சம் கமிஷன் புரோக்கர்களுக்கு செல்கிறது.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, பங்கு வாங்கி விற்கும் பொழுது புரோக்கர்களுக்கு சில கமிஷன் செல்லும். அதை யார் குறைவாக வழங்குகிறார்கள் என்று பார்த்து வாங்க வேண்டும். இது போக நமக்கு ஏதும் பிரச்சினை என்றால் வாடிக்கையாளர் சேவை மையம் சரியாக வேகமான முறையில் உதவுகிறார்களா என்றும் கவனிக்க வேண்டும். இந்த டீமேட் கணக்கிற்கு வருடத்திற்கு ஒரு முறை பராமரிப்பு கட்டணம்( Maintenance Charge) கட்ட வேண்டும்.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு