மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை
![]() |
| மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை |
நாம் அடிக்கடி செய்திகளில் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை என்ற இரண்டு வார்த்தைகளையும் கேட்டு இருப்போம். நமது நாட்டைப் பொறுத்தவரை இந்த இரண்டு சந்தைகள்தான் முக்கியமானவை. இது தவிர இன்னும் சில இருந்தாலும் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைதான் முக்கியமானவை.
இந்த இரண்டிலும்தான் பெரும்பாலான கம்பெனிகள் அதன் பங்குகளை வெளியிட்டு இருக்கும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9:15 முதல் மாலை 3:30 வரை வர்த்தகம் நடக்கும். இந்த நேரத்தில்தான் பங்குகளை வாங்குவதும் விற்பதும், உங்களது டீமேட் அக்கவுண்ட் மூலமாக நடக்கும்.

Comments
Post a Comment