PPF - பொது ப்ரொவிடண்ட் பண்டு
![]() |
| PPF - பொது ப்ரொவிடண்ட் பண்டு |
நமது அரசாங்கத்தின் நல்லதொரு சிறந்த முதலீடு திட்டம் பொது ப்ரொவிடண்ட் பண்ட ( Public Provident Fund). இந்த திட்டம் ஆரம்பிப்பதற்கு தனிப்பட்ட தகுதி என்று எதுவும் தேவை இல்லை. மாத சம்பளம் வாங்குபவர்கள் ஆனாலும் சரி அல்லது சுய தொழில் செய்பவர்கள் ஆனாலும் சரி, வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தை நீங்கள் பொதுத்துறை வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு 8% வட்டி கிடைக்கும். இந்த வட்டி நிலையாக இல்லாமல் மாறும் தன்மை உடையது. இதில் முதலீடு செய்யும் பணத்தை 15 வருடங்களுக்கு முன்னாள் எடுக்க முடியாது. ஆனால் விருப்பப்பட்டால் 6 வருடம் கழித்து முதலீட்டின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளலாம். மேலும் கடன் தேவைப்படும் பட்சத்தில் இதன் மூலமாக கடனும் பெற்றுக் கொள்ளலாம். இதில் செய்யும் முதலீடை வருமான வரி விலக்கு 80 சியின் கீழ் காட்டி பயன் பெறலாம்

Comments
Post a Comment