பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்
பிக்சட் டெபாசிட்

ஜீரோ ரிஸ்க் எடுக்க விரும்புகிறவர்கள் இதில் முதலீடு செய்து வருமானம் பெறலாம். குறைந்த அளவு லாபமே என்றாலும் மிகவும் பாதுகாப்பானது. அதனால்தான் ஜீரோ ரிஸ்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் என்று கணக்கிடுகிறமோ அந்த லாபம் முழுமையாக கிடைத்து விடும் என்பது இதன் சிறப்பு. நீங்கள் 5 வருடம் முதலீடு செய்யும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அரசு 80 சி மூலமாக 1.50 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கிறது. இருந்தாலும் 80 சியின் கீழ் வருமான வரி விலக்கு பெற இதை விட பல சிறந்த திட்டங்கள் இருப்பதால் சற்று யோசிப்பது கூட நல்லது.

இதன் வட்டி விகிதங்கள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். அதிக பட்சமாக 8.5 % வரை கிடைக்கும். நினைவில் கொள்ளவும், இது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். எனவே முதலீடு செய்யும் முன்
தெளிவாக விசாரித்து அறிந்து கொள்ளுதல் நன்று.

பிக்சட் டெபாசிடில் முதலீடு செய்யும் பொழுது குறைந்த காலத்திற்கு அதிக லாபம் என்றும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது லாபம் குறையும் என்றும் நிதி ஆலோசர்கள் சொல்வது உண்டு. அது ஏன் என்று விளக்கமாக அடுத்த பக்கத்தில் பார்க்கலாம்.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு