செல்வ மகள் சேமிப்பு திட்டம்
![]() |
| செல்வ மகள் சேமிப்பு திட்டம் |
பெண் குழந்தைகளுக்கு என்று மத்திய அரசால் பிரத்யோகமாக கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samruddhi Yojana). இந்த திட்டம் தமிழில் செல்வ மகள் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது அவர்களது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுத்துறை வங்கிகளிலும் ஆரம்பிக்கலாம். பாரத பிரதமர் மோடி அவர்களது அரசு இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தது. ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும்.
இந்த திட்டம் ஆரம்பிக்கும் பொழுது இதற்கான வட்டி விகிதம் அதிகமாக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து தற்பொழுது 8.1 சதவித வட்டி விகிதம் லாபம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டம் அறிமுகமான புதிதில் அதிகபட்ச முதலீடு 14 வருடங்கள் என்று இருந்தது.

Comments
Post a Comment