நாமினி அவசியம்

நாமினி
மியூச்சுவல் ஃபண்ட் நாமினி


எந்த ஒரு முதலீடு தொடங்கினாலும் அதில் நாமினி பெயர்  என்று கட்டாயம் ஒரு காலம் இருக்கும். ஆனால் பெரும்பாலான நபர்கள் நாமினி யின் பெயர் குறிப்பிட மறந்து விடுகிறார்கள் அல்லது இதற்கெல்லாம் நாமினி குறிப்பிட வேண்டுமா என்று அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். இவ்வாறு நாமினி குறிப்பிடாமல் விடுவது மிகப் பெரும் தவறு.

எல்லா நாளும் எல்லா நேரமும் எல்லார்க்கும் சரியாக இருப்பதில்லை. ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால், முதலீட்டின் வருமானம் நாமினிக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் வந்து சேர நாமினியின் பெயர் குறிப்பிடுதல் மிக அவசியம்.

நீங்கள் நாமினியாக குறிப்பிடும் நபர் உங்கள் துணையாகவோ, குழந்தைகள் (மைனர் எனில், பாதுகாவலர் பெயர் தேவைப்படும்), மற்றொரு குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நீங்கள் நம்பும் வேறு எந்த நபராகவும்  என்று எந்த உறவிலும் இருக்கலாம்.

ஒருவேளை நீங்கள் நாமினியை மாற்றிக் கொள்ள விரும்பினால், மாற்றிக் கொள்ளலாம். மேலும் ரத்து செய்ய விரும்பினாலும் செய்யலாம்.





Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு