பண்டு மனேஜர்ஸ்
![]() |
| Mutual Fund Manger in Tamil |
உங்களுக்கு பங்குச் சந்தை பற்றிய அறிவு இல்லை என்றால் , உங்களால் எப்படி முதலீடு செய்ய முடியும்? இது போன்ற நேரத்தில் நமக்கு கை கொடுப்பதுதான் மியூச்சுவல் பண்டு என்று பார்த்தோம்.
சரி , இந்த மியூச்சுவல் பண்டு சரியான முறையில் வழி நடத்த ஒருவர் வேண்டும் அல்லவா ? அவர்தான் பண்டு மனேஜர். நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று இவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் மியூச்சுவல் பண்டு திட்டத்தின் பண்டு மனேஜர் யார் ? அவர் இன்னும் எத்தனை திட்டங்கள் நடத்தி வருகிறார். இதற்கு முன் அல்லது இப்பொழுது நடத்தி வரும் திட்டங்கள் எல்லாம் லாப பாதை நோக்கி செல்கிறதா? என்று எல்லா விஷயங்களையும் கவனிக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் பண்டு மனேஜர் முழுத் தகவலும் வேண்டும்.
இது போன்ற தகவலை இணையதளத்தில் இருந்து மிக எளிமையாக எடுத்து விடலாம். முதலீடு செய்யுங்கள், பண்டு மனேஜர் யார் என்னவென்று முழு விபரமும் தெரிந்த பின் முதலீடு செய்யுங்கள்.
ஒரு திட்டத்தில் முதலீடு செய்து விட்டால் அதோடு நிம்மதி பெருமூச்சு விடக் கூடாது. எந்த திட்டத்தில் முதலீடு செய்தோமோ, அதை மாதம் ஒரு முறையாவது கவனிக்க வேண்டும். ஒரு சில இணையதளங்களில் நீங்கள் பதிவு செய்தால், அவர்கள் நீங்கள் கேட்காமலே உங்கள் பண்டு திட்டத்தின் சமீபத்திய செயல்பாடுகளை அனுப்புவார்கள்.

Comments
Post a Comment