தங்க நகை சேமிப்புத் திட்டம்

தங்க நகை சேமிப்புத் திட்டம்
தங்க நகை சேமிப்புத் திட்டம்


தங்க நகை சேமிப்புத் திட்டம் என்றால் என்னவென்று படித்து விட்டு , அதன் பிறகு தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா என்ற பக்கத்தையும் படித்து விடுங்கள். அப்பொழுதுதான் தெளிவாக புரியும்.

நமது ஊரில் சீட்டு கட்டுவது போல, மாத மாதம் ஒரு தொகையை நாம் கட்டி வர வேண்டும். குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக சில தொகையை நிர்ணயித்திருக்கிறார்கள். சில கடைகளில் அந்த எல்லையும் இல்லை. வாடிக்கையாளர்கள் அதில் முதலில் இணைவதற்கு சில கவர்ச்சிகரமான பொருட்கள் இலவசம் என்று அறிவிக்கிறார்கள். குறைந்தபட்ச காலம் 12 மாதங்கள் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

சில நிறுவனங்கள் ஒரு மாத தவணையை போனஸ் ஆக தருகிறார்கள். சில நிறுவனங்கள் செய்கூலி சேதாரம் கிடையாது என்று கூறுகிறார்கள். சில நிறுவனங்கள் 12 வது மாத தவணை தள்ளுபடி என்று தருகிறார்கள். நீங்கள் பணம் கட்ட கடைக்கு அலைய வேண்டியது இல்லை. மாத மாதம் வீட்டிற்கே வந்து வசூலித்து விடுகிறார்கள் அல்லது எக்ஸ் மூலம் நமது வங்கி கணக்கில் இருந்து எடுத்து விடுகிறார்கள். இல்லை என்றால், 2 , 3 மாதங்கள் சேர்த்து கட்ட சொல்கிறார்கள்.

12 வது மாதம் பணம் சேர்ந்ததும், நீங்கள் நிறுவனத்திடமிருந்து நாக்கை வாங்கிக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பணமாக திருப்பி தரப்பட மாட்டாது. கடைசித் தவணை எந்த தேதியில் முடிகிறதோ அந்த தேதியில் தங்கத்தின் விலையைப் பொறுத்து தங்கமாக வாங்கிக் கொள்ளலாம்.





Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு