வரி சேமிப்பு இ.எல்.எஸ்.எஸ் பண்டு

 இ.எல்.எஸ்.எஸ் பண்டு
 இ.எல்.எஸ்.எஸ் பண்டு


மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்து வருமான வரி சேமிக்க முடியுமா? என்ற சிந்தனை வருகிறதா . சரி அப்படியென்றால் நீங்கள் தேர்ந்து எடுக்க வேண்டியது இ.எல்.எஸ்.எஸ் (ELSS) ஃபண்ட் முதலீடு.

இதில் 11%  முதல் 16% வரை வருமானம் வரும் வாய்ப்புகள் மிக அதிகம். சில நேரங்களில் இது அதையும் தாண்டி அதாவது 19% வரை கொடுக்கும் திறன் உடையது மற்றும் ஐந்தாண்டு காலத்தில் 17% வருமானம் வரை கொடுக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

ஆனால், இந்த அளவு  வருமானம் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. முன்பே சொன்னது போல,  பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து வருமானம் இருக்கக்கூடும் என்பதை எப்பொழுதும் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்காமல் எதுவும் கிடைப்பதில்லை.

பெரும்பாலும் மியூச்சுவல் பண்டுகள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தையே கொடுக்கும்.  நீங்கள் நல்ல பண்டை தேர்ந்து எடுத்து இருந்தால்.

கடந்த பட்ஜெட்டை நினைவுபடுத்தி பாருங்கள். ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள லாபத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி 10% செலுத்த வேண்டும். 18.5% வரை வருமானம் கிடைக்கும்பட்சத்தில் நீங்கள் எந்த வரியும் கட்டவேண்டி இருக்காது.   உதாரணமாக , வரி விலக்கு 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகைக்காக இந்த ஃபண்டில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்திருந்தால், மூன்றாண்டு கழித்து அதன் அதன் மதிப்பு ரூ. 2.49 லட்சமாக இருக்கும். இங்கு லாபமானது ரூ.1 லட்சத்துக்குள் இருப்பதால், எந்த வரியும் செலுத்தத் தேவை இருக்காது.





Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு