அட்சய திருதியை
![]() |
| அட்சய திருதியை |
உண்மையிலே அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுமா? என்று கேட்டு அதற்கு விளக்கம் தருவதற்கான பக்கம் இது அல்ல. அதை பற்றி இன்னொரு பக்கத்தில் தெளிவாக காணலாம்.
அட்சய திருதியை நாளில் தங்க நகைக்க கடைகளில் கூட்டம் கூடுவது மிக இயல்பான ஒன்றுதான். ஆனால் இது போன்ற நேரத்தில் தான் , நீங்கள் வாங்கும் தரம் ஹால்மார்க் முத்திரை என்று எல்லாவற்றையும் கண்டிப்பாக தெரிந்து வாங்க வேண்டும்.
தங்கம் ஒரு நல்ல முதலீடுதான், அதில் சந்தேகம் இல்லை. ஆனால் , முதலீடு என்று வரும் பொழுது குறைவான பணம் முதலீடு செய்து அதிக படியான வருமானம் கிடைப்பது தானே உண்மையான முதலீடு. ஆனால் அட்சய திருதியை அன்று தங்க விலை உயர்வாகவே இருக்கும். இதை பலரும் அறிவதில்லை.
அட்சய திருதியை முடிந்து அடுத்த சில நாள்களிலோ அல்லது சில வாரங்களிலோ தங்க விலை குறைந்து விடும். ஆதலால் , முதலீடாக வாங்க நினைத்தால் இது போன்ற நாட்களில் வாங்குவது புத்திசாலித்தனம். உங்கள் பணமும் பெருகும்.

Comments
Post a Comment