பிக்சட் டெபாசிட் - சிறு உதாரணம்
![]() |
| பிக்சட் டெபாசிட் - சிறு உதாரணம் |
ஒரு வங்கியானது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடம் முதலீடு செய்யும் போது 6.5 சதவீத வட்டி விகித லாபத்தினை கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் அதில் 1.50 லட்சம் ரூபாயினை 10 வருடத்திற்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 10 வருடம் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகையானது சராசரியாக 2.85 லட்ச ரூபாயாகத் திரும்பக் கிடைக்கும்.
இதே முதலீடே நீங்கள் 5 வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் சராசரியாக 2.14 லட்ச ரூபாயாகக் திரும்ப கிடைத்திருக்கும். வருமான வரி விலக்கு 80 சியின் கீழ் பயனும் பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுது மீண்டும் அந்த முதிர்வு தொகையினை மறு முதலீடு செய்யும் போது அதே வட்டி விகிதம் வங்கி கொடுக்கிறது என்று கணக்கு வைத்துக் கொண்டால் 10 வருடத்தில் சுமார் 3.07 லட்ச ரூபாயாக லாபம் கிடைக்கும்.
இதனால்தான் பிக்சட் டெபாசிட் குறைந்த கால முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிறது என்று நிதி ஆலோசகர்கள் சொல்கிறார்கள்.

Comments
Post a Comment