செல்வ மகள் சேமிப்பு திட்டம் - விரிவான அலசல்
![]() |
| செல்வ மகள் சேமிப்பு திட்டம் - விரிவான அலசல் |
இதில் செய்யும் முதலீடை வருமான வரி விலக்கு 80 சியின் கீழ் காட்டி பயன் பெறலாம். இந்த திட்டம் ஆரம்பித்த பிறகு, இணைய தளம் மூலமாகவும் பணம் செலுத்தலாம். வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
10-ம் தேதிக்குள் தவணையை முதலீடு செய்யும் பட்சத்தில் வட்டி குறையாது. தவறினால் அந்த மாதத்திற்குரிய வட்டி குறைந்து விடும். குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யும் உண்டு. இதை தாண்டி செலுத்தும் பட்சத்தில் டெபாசிட் செய்யும் தொகைக்கு வட்டி கிடையாது. கூடுதலாக டெபாசிட் செய்த தொகையை எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறலாம். அதனால் கூடுதல் தொகை செலுத்தும் எண்ணம் இருந்தால் வேறு ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.
தவணையை சரியாகச் செலுத்தவில்லை எனில் 15 வருடங்கள் கழித்து வரும் தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு 4 சதவீதமாக மட்டுமே பெற இயலும். எனவே கவனமாக முதலீடு செய்து தவறாமல் கவனித்து வரவும். ஏதேனும் காரணமாக கணக்கு இடை நிறுத்தப்பட்டால் 50 ரூபாயினை அபராதம் செலுத்தி விடுப்பட்ட கணக்கினை மீண்டும் தொடரலாம்.
முதலீடு 21 வயது ஆகும் போது அதன் முதிர்வு காலத்தை அடைந்துவிடும். அதற்குப் பிறகு வட்டியும் அளிக்கப்படமாட்டாது. வேறு ஏதேனும் வங்கி அல்லது தபால் நிலைய கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூ.100 கட்டணமாகச் செலுத்தி எளிதாக மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு செய்யும் பொழுது சில ஆவணங்கள் தேவைப்படும்.
பெண்குழந்தையானது 18 வயது நிரம்பியவுடன் 50 சதவீதம் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது சில ஆவணங்கள் தேவைப்படும். திருமணம் ஒரு மாதம் முன்பு அல்லது திருமணம் முடிந்து மூன்று மாதத்திற்குப் பிறகு மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் பொழுது சில ஆவணங்கள் தேவைப்படும்.

Comments
Post a Comment