தனிநபர் கடன்
![]() |
| தனிநபர் கடன் |
உங்களுடைய சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்பட்சத்தில், குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். ஆனால், புதிதாக கடன் வாங்க விண்ணப்பிக்கும் பொழுது அதிக வட்டியே பெரும்பாலும் வங்கிகள் வழங்குகிறது.
தனி நபர் கடன் பார்க்க மிக எளிதாக தோன்றும். மாட்டிக் கொண்டால் மோசமான விளைவுகளை சில ஆண்டுகளில் கண் முன்னே கொண்டு வந்து விடும். ஏதேனும் ஒரு காரணத்தினால் உங்களுக்கு வர வேண்டிய பணம் வராமல் போக கடனை கட்ட முடியாத சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற நேரத்தில் அசல்கூட கட்ட முடியாமல் வட்டி இன்னும் எகிறி விட நிலைமை படு மோசமாகும்.
எப்படியோ உங்கள் கைகளுக்கு பணம் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது நீங்கள் கடனை கட்டி முடிக்க சென்றால், ப்ரீ-குளோஸர் அபராத தொகையை சேர்த்து கட்ட வேண்டும்.
ப்ரீ அப்ரூவல் மூலமாக மிக குறுகிய நாட்களிலே கடன் கிடைத்துவிடும். அவசரப்பட்டு வாங்கி கைகளில் வைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் சில வங்கிகள் 12 - 18 மாதங்களுக்குப் பிறகு ப்ரீ-குளோசர் அபராதம் வசூலிப்பதில்லை. எனவே கடன் தேவைப்படும் சில நாட்கள் முன்பு நீங்கள் வாங்கினால் வட்டி செலவு குறையும்.
கையில் பணம் கிடைத்தால் உடனே சென்று பணத்தை கட்டி விடுங்கள். முன்கூட்டியே கடனை முடிக்க பெரும்பாலும் 4% அபராத வட்டி விதிக்கிறார்கள். இது போன்ற நேரத்தில் கணக்கு போட்டு பார்த்தால், சற்று சிறிய மற்றும் மிதமான அளவிலான பணம் சேமிக்கப்படும்.

Comments
Post a Comment