கார்னர் பிளாட்
![]() |
| கார்னர் பிளாட் |
நிலத்தில் முதலீடு செய்ய விரும்பினால், முடிந்த வரை கார்னர் (முனை ) பிளாட் வாங்க முயற்சி செய்யுங்கள். அப்படி என்ன கார்னர் பிளாட்டின் சிறப்பு என்று கேட்கிறீர்களா ?
நீங்கள் நிலம் வாங்கும் பொழுது நிலத்து உரிமையாளரிடமோ அல்லது ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமோ பேசினால் அவர்கள் கார்னர் பிளாட் என்றால் ஒரு சதுர அடிக்கு வழக்கமான மதிப்பை விட சற்று கூடுதல் சொல்வார்கள். ஏன் என்றால் கார்னர் பிளாட் வைத்து கூடுதல் பலன்கள். அதனால் கூடுதல் லாபம்.
1. கார்னர் பிளாட் சுற்றி எப்பொழுதும் சிறந்த காற்றோட்டம் இருக்கும். அருகிலே பிற வீடுகள் நெருக்கமாக இருந்தாலும் இது சாத்தியமே.
2. கடைகள் அமைத்து வாடகை விடுவதற்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் உங்கள் வருமானம் சற்று கூடுதல் கிடைக்கும்.
3. இரண்டு தெரு முனைகளை பயன்படுத்த வசதியாக இருக்கும்.
4. வாகனங்கள் பார்க்கிங் நிறுத்தி எடுப்பதற்கு எளிமையாக இருக்கும். அதாவது ஒரு வழியாக நுழைந்து இன்னொரு வழியாக வெளி வருவது.
5. வீடு வாசலை உங்கள் விருப்பப்படி வாஸ்து சாஸ்திரம் பார்த்து வைக்க சௌகரியமாக
இருக்கும்.

Comments
Post a Comment