முக்கிய வார்த்தைகள் - ஈ பி எஸ் - EPS


ஈ பி எஸ் - EPS
ஈ பி எஸ் - EPS


பங்குச் சந்தை பற்றி ஒருவர் பேசும் பொழுது என்ன பேசுகிறார் என்று புரிய சில வார்த்தைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் என்ன பேசுகிறார்கள் என்றே புரிந்து கொள்ள முடியும். அப்படி சில முக்கியமான வார்த்தைகளைத்தான் பார்க்க போகிறோம்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இங்கே சில பார்முலாக்கள் (சூத்திரங்கள் ) பார்க்க போகிறோம். அது எல்லாம் சற்று தெரிந்து கொள்ள மட்டும் தான். அதனால் அதை நினைத்து பயப்பட தேவை இல்லை.

ஈ பி எஸ் - EPS ( Earning Per Share) :

ஒரு குறிப்பிட்ட காலத்துல அந்த கம்பெனியோட ஒரு பங்குக்கு  எவ்வளவு வருமானம் தந்து இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இதை கணக்கிட ஒரு பார்முலா(சூத்திரம்) உதவுகிறது.

பார்முலா = கம்பெனி நிகர லாபம் / கம்பெனி மொத்த பங்கு

இந்த EPS மதிப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில், அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கலாம். ஆனால் , பங்கு வாங்க இந்த ஒன்று மட்டுமே போதுமானது அல்ல. நினைவில் கொள்ளுங்கள், சில நேரங்களில் EPS மதிப்பு நன்றாக இருந்தும் , பங்கு சரியான லாபம் கொடுக்காது. அது ஏன் என்று போக போக புரியும்.

அதே சமயம் , EPS மதிப்பு நன்றாக இருந்து , கடந்த வருடத்துடன் ஒப்பிடும் பொழுது , இந்த வருடம் கம்பெனியின் வளர்ச்சி நன்றாக இல்லை எனில் , மேற்கொண்டு எதிர்காலத்தில் கம்பெனியின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சில தகவல்களை வைத்து முடிவு செய்து பங்கு வாங்கவா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு