தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா?
![]() |
| தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா? |
தங்க நகை சேமிப்புத் திட்டம் லாபமா? என்ற இந்த பக்கத்தை படிக்கும் முன்பு , தயவு செய்து தங்க நகை சேமிப்புத் திட்டம் பக்கத்தை படித்து விடவும். கீழே வரும் விவரங்களை மனதில் கொள்ள வேண்டும்.
1. நீங்கள் உங்கள் தவணைகளைப் மாத மாதம் பணமாகச் செலுத்துகிறீர்கள். இறுதியில் நேரடியாக உங்கள் முதலீட்டைப் பணமாகத் திரும்பப் பெறமுடியாது
2. எந்தவொரு முதலீடாக இருந்தாலும் அரசோ அல்லது செபி அமைப்போ அல்லது ரிசர்வ் வங்கியின் தலையீடோ இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் அதுவெல்லாம் கிடையாது.
3. இது போன்று சில திட்டங்கள் நடத்தி கடை மூடப்பட்ட நிறுவனங்களும் உண்டு.
4. தவணை முடியும் தேதியில் தங்கம் விலை குறைவாக இருந்தால் மட்டுமே லாபம் சாத்தியம். இல்லையெனில் லாபம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது.
5. நாம் எந்த ஒரு பொருளையும் வாங்கி விட்டுத்தான் தவணை செலுத்துவோம். இங்கு அதற்கு அப்படியே தலை கீழாய் நடக்கும்.
6. நல்ல வேலைப்பாடு உள்ள நகை வாங்க அனுமதி உண்டா என்று தெளிவான விதி முறை அறிதல் அவசியம்.
7. தங்க நாணயமாகவோ அல்லது கட்டியாகவோ வாங்க அனுமதி இருக்கிறதா என்று அறிதல் அவசியம்
தங்க நாணயமாகவோ அல்லது கட்டியாகவோ வாங்கி அதை உங்கள் தங்க நகையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மையான லாபம் புரியும்.

Comments
Post a Comment