மனை தேர்ந்தெடுத்தல்
![]() |
| மனை தேர்ந்தெடுத்தல் |
நிலத்தில் முதலீடு செய்வது நல்ல முதலீடு என்று முடிவெடுத்த பிறகு ஒரு மனையை எப்படி தேர்ந்தெடுப்பது என்று பார்ப்போம்.
1. மழை நேரத்தில் சேறு, சாக்கடை என்று அசுத்தமாக இல்லாமல் நீர் வடிந்து செல்லுதல் போன்ற அமைப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட நிலமாகவாவது இருக்க வேண்டும்.
2. பஞ்சாயத்து குடிநீரோ, மெட்ரோ குடிநீரோ விண்ணப்பித்தால் உடனே கிடைக்குமா ? அல்லது ஏற்கனவே அந்த பகுதியில் இருக்கிறதா ? என்றும் பார்க்க வேண்டும்.
3. மின்சார வசதி , கழிவு நீர் வசதி சரியான முறையில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
4. மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைகள் அருகிலேயே இருக்கிறதா மற்றும் பள்ளிக்கூடம் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
5. பேருந்து , ரயில் நிலையம் என்று அருகில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
6. அவசரத் தேவைக்கு மருத்துவமனை அருகிலேயே இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
7. பணத் தேவைக்கு வங்கி அல்லது ATM அருகிலேயே இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.
இவை எல்லாம் அருகில் இருந்தால் விலை சற்று கூடுதலாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் எதிர்காலத்தில் சுமை இல்லை என்பதை மனதில் கொள்ளவும்.

Comments
Post a Comment