தங்கம் டிசைன்
![]() |
| தங்கம் டிசைன் |
ஒரு கடைக்கு சென்று தங்க நகை வாங்க செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு நகை பிடித்துப் போக என்ன விலை என்று விசாரித்தால் நீங்கள் வாங்கும் தங்கத்தின் அளவை விட கூடுதலாக 1 அல்லது 2 கிராம் விலை சொல்லுவார்கள். ஏன் என்று கேட்டால் நகையில் வேலைப்பாடு அதிகம் என்று சொல்லி விடுவார்கள். வேறு வழியும் இல்லாமல் நீங்களும் வாங்கி விடுவீர்கள்.
செய்கூலி , சேதாரம் என்ற இரண்டு வார்த்தைகள்தான் இந்த நிறுவங்களின் ஆயுதம். இதை சொல்லியே நம்மிடமிருந்து பணத்தை வாங்கி விடுவார்கள். செய்கூலியை சரி என்று சகித்துக் கொண்டாலும் , சேதாரம் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது. சேதாரம் பற்றி விளக்கம் கேட்டால், அதை திரும்பப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி விடுவார்கள்.
பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த நகையை அதே கடையில் மாற்றினாலும் சேதாரம் கழித்து விட்டுத்தான் எடுப்பார்கள். இது பழைய நகை என்று இன்னொன்றையும் சொல்வார்கள். பிறகு என்ன, கையில் கிடைக்காத சேதாரத்திற்கு இரண்டு முறை பணம் வீணாகி விட்டது.
இதை எல்லாம் எப்படி லாபமாக மாற்றுவது என்று ஒரு பார்க்கலாம். வேலைப்பாடு இல்லாத அதிக எடை கொண்ட நகைகளை வாங்க வேண்டும். வேலைப்பாடு குறைவாக இருக்கும் பொழுது , செய்கூலி சேதாரம் இரண்டும் குறைவாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமையால் இன்னும் சிறிது குறைக்க முயற்சி செய்யலாம். கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகளை வாங்க தவிர்ப்பது நல்லது. கல்லுக்கு எடை இல்லை என்று சொல்லி கல்லுக்கு விலை போடுவார்கள். இதே நகையை திரும்ப கொடுத்து பாருங்கள். கல்லுக்கு சல்லி காசு கிடைக்காது.

Comments
Post a Comment