ஸ்டாப் லாஸ்

ஸ்டாப் லாஸ்
ஸ்டாப் லாஸ்


பங்கு வர்த்தகம் செய்யும் அனைவரும் பயன்படுத்தும் வார்த்தை ஸ்டாப் லாஸ் (Stop Loss). அப்படியென்றால் பங்கு வர்த்தகத்தில் முக்கியமான இடத்தை இந்த வார்த்தை பிடித்து இருக்கிறது என்று பொருள்.

நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் என்று வாங்குகிறீர்கள். அடுத்த இரண்டு தினங்களில் அந்த பங்கானது இரண்டு ரூபாய் குறைந்து 98 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகிறது. இன்னும் சில தினங்களில் அது மேலும் குறைந்து 95 ரூபாய் என்று வர்த்தகம் ஆகிறது.

இது போன்ற நேரங்களில் ஒரு பங்கை வாங்கும் பொழுதே ஸ்டாப் லாஸ் செட் செய்து வைத்து விடுவார்கள். அதாவது வர்த்தகம் செய்யும் உங்களால் 5 ரூபாய் வரை இழப்பை தாங்க முடியும் என்றால் 95 ரூபாய்க்கு ஸ்டாப் லாஸ் செட் செய்து வைத்து விடுவார்கள். 100 ரூபாய் பங்கு 98 என்று ஆகும் பொழுது உங்கள் பங்கு விற்க பட மாட்டாது. அதுவே 95 என்று இறங்கியவுடன் விற்று விடும். சிறிதளவு நஷ்டம் ஏற்படும்.

மேலும் ஸ்டாப் லாஸ் என்பது உங்கள் வருமான திறன் மற்றும் பங்குச் சந்தையின் கணிப்பை வைத்து செயல்படுத்த வேண்டும்.




Comments

Popular posts from this blog

சப்போர்ட் லெவெல்

போனஸ் மற்றும் போனஸ் ரேஷியோ

பேஸ் வேலுயு - முக மதிப்பு