புக் வேலுயு
![]() |
| புக் வேலுயு |
இந்த புக் வேலுயுவை நிகர சொத்து என்றும் சொல்வார்கள். நிகர சொத்து என்றவுடன் சிலருக்கு புரிந்து இருக்கும். மேற்கொண்டு விரிவாக பார்ப்போம்.
நீங்கள் ஒரு பழைய கம்பனியை விலைக்கு வாங்க போகுறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கண்ணை மூடிக் கொண்டு ஒரு விலை சொன்னவுடன் வாங்கி விடுவீர்களா ? மாட்டீர்கள் அல்லவா ? அந்த கம்பெனியின் இயந்திரங்கள் , அப்படி இப்படி என்று எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் அல்லவா. தேய்மானம் எல்லாம் பார்த்து விட்டுத்தான் ஒரு விலை சொல்வீர்கள். அந்த விலைதான் புக் வேலுயு என்று சொல்கிறார்கள்.
இப்பொழுது உங்கள் மனதில் ஒரு விஷயம் சட்டென்று தோன்றி இருக்கும். அதாவது புக் வேலுயு அதிகமாக இருந்தால் நல்ல கம்பெனி என்றும் குறைவாக இருந்தால் நல்ல கம்பெனி அல்ல என்றும் முடிவு செய்து இருப்பீர்கள். உங்கள் எண்ணம் கொஞ்சம் சரியானதுதான். ஆனால் இன்னும் பல விஷயங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டி இருக்கிறது. அதன் பிறகு முடிவெடுக்கலாம்.

Comments
Post a Comment