பழைய நகையை மாற்றலாமா?
![]() |
| பழைய நகையை மாற்றலாமா? |
தங்க நகை வாங்கும் சில பேர் 2 அல்லது 3 ஆண்டுக்குள் பழைய நகையை மாற்றி விட்டு மீண்டும் புது நகை வாங்க முயற்சி செய்கிறார்கள். இப்படி பழைய நகையை மாற்றும் பொழுது என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனித்தால் அடுத்த முறை மாற்றுவதற்கு சற்று சிந்தனை செய்வீர்கள்.
பழைய நகை விற்கும் பொழுது கழிவு என சுமார் 3 முதல் 5 % வரை கழிவு என எடுத்து விடுவார்கள். இந்த பழைய நகை வாங்கும் பொழுதே சேதாரம் 10 முதல் 20% வரை செலவு செய்து இருப்போம் இப்படி பழைய நகை மாற்றும் பொழுது நமது லாபமானது கொஞ்சம் குறைகிறது.
இப்பொழுது பழைய நகை விற்று கிடைக்கும் பணத்தில் புது நகை வாங்கும் போது அதற்கும் சேதாரம் செலவழிக்க வேண்டியது இருக்கிறது. எனவே முதல் முறை நகை வாங்கும் பொழுதே சேதாரம் கழிவு எல்லாவற்றையும் மனதில் வைத்து கொண்டு உங்களுக்கு பிடித்த நகையை வாங்குவது நலம்.

Comments
Post a Comment