இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு தேர்வு செய்வது
![]() |
| இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு தேர்வு செய்வது |
சென்ற பக்கத்தில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு விஷயங்கள் பார்த்தோம். இந்த பக்கத்தில் சரியான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு தேர்வு செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம். நான் எத்தனை இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு வாங்குவது என்ற ஒரு குழப்பமும் வரும்.
ஒன்று அல்லது இரண்டு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் முதலீடு செய்வது போதுமானது. அதில் ஒன்று லார்ஜ்கேப் ஃபண்டாக இருக்கவேண்டும். ஏன் லார்ஜ்கேப் ஃபண்டாக இருக்க வேண்டும் என்று கேட்டால், லார்ஜ்கேப் இந்தியாவில் இருக்கும் டாப் 100 கம்பெனிகளில் முதலீடு செய்யும். அதனால் அவ்வளவு எளிதாக நஷ்டம் வராது. ரிஸ்கும் சற்று குறைவு. அடுத்ததாக, மிட் அண்டு ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும். இவை லார்ஜ்கேப் ஃபண்டுகளைவிட அதிக அளவில் வருமானம் கொடுக்கும் வாய்ப்புகள் சற்று அதிகம். அதே வேளையில் இவற்றில் ரிஸ்க்கும் சிறிது அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், முதலீடு செய்வதற்குமுன் நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் பண்டின் கடந்தகால செயல்பாடுகளை தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். குறைந்தது 3 முதல் 5 ஆண்டு கால வரையிலான ஆராய்ச்சி அவசியம்.

Comments
Post a Comment